Thursday 6 April 2023

குறள்: 1231


மேஜை எதிரே
ஆப்தமாலஜிஸ்ட்
கண்ணில் என்ன
பிரச்சினை கேட்டார்
முன்முற்ற புல்வெளி
கறுப்பாக தெரிகிறது
இடையிடையே சில
வெண்புல்லும்
தெரிகிறது என்றேன்
உங்கள் கண்களின்
கண்ணாடி சென்னையில்
இருக்கிறது
இன்டிகோவில்
வரவழைக்கிறேன்
சிரித்தபடி சொன்னார்

தோட்டத்து குண்டுமல்லியில்
கறுப்பு பாவையை
காணவில்லை என
காவலாளியை அழைத்து
என்ன காவல் செய்கிறாய்
மல்லியில் உள்ள பாவையை
யாரோ திருடி சென்றுவிட்டனர்
திட்டியதை வாங்கிக்கொண்டு
திருதிருவென முழித்தார்
கண்களில் தானே உண்டு
இவரென்ன மல்லியில்
தேடுகிறார் நினைத்தபடி
சரிம்மா இனிமேல்
ஒழுங்காக காவல்
செய்கிறேன் என
சொன்னபடி நகர்ந்தார்

ஃபுரூட் சாலட் செய்ய
கையில் ஆப்பிளை
எடுத்த கங்காவை
பார்த்துதோலை உரி
ரத்தம் வரப்போகிறது
என்று கத்தினேன்
அவளோ கன்னத்தையா
உரிக்கிறேன்
பழத்தை உரிக்க
ஏன் பதற்றப்படுகிறேன்
என கேட்டாள்
அவளிடம் சொல்லவில்லை
அது அவரின் கன்னம்
போல தெரிவதை!

என் கண்களுக்கு
என்னதான் ஆயிற்று
எதுவும் சரிவர
தெரியவில்லையே
யாரிடம் சொல்வது
எவரை கேட்பது?

Compliments: 

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...