Thursday, 29 October 2026

Narmadha

I don't want my daughter to be like me

She should talk in the places
Where did i hesitate

She should say No bravely
Where i said yes reluctantly

She should fly in the sky
Where i shrinked my dreams for others

She should rise again after mistakes 
Where i bowed down shamefully 

She should know being quiet is not being  great woman
Living with self esteem is being great woman 

Whatever i didn't  achieve 
She should achieve all those things! 

I won't think i have been defeated
Rather i would be pride that
I have brought up her right! 

29/10/2016 : 22:45 PM 

Wednesday, 28 October 2026

சொல் மறந்த பாடல்

மிகவும் 
ரசித்த பாடல்
ஒன்று

இசை
ராகம்
குரல்
ஞாபகம்
இருக்கிறது.

சொற்கள்
மறந்துபோனது
நினைவுகளின்
அடுக்கில் இருந்து! 

அந்தப்
பாடல் நீயா? 

278/10/2016 : 6:48 AM 

Tuesday, 25 August 2026

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள்
பெல்லட் குண்டுகளாய்
இடைவிடாமல்
பொழிந்தபோதும் 

மாணவர்களைப்போல
நெஞ்சம் நிமிர்த்தி
எதிர்கொண்டு 

இசைந்தாடுகின்றன 
இலைகள்!

மழை ஓயுமா?
இலை ஓயுமா?

Tuesday, 4 August 2026

காலம்

வரம் என நினைத்ததை
சாபம் என நினைக்க வைக்கிறது

பெருமை என நினைத்ததை
சிறுமை என நினைக்க வைக்கிறது

காலம் எனும் ஆசான்! 

Thursday, 30 July 2026

Case studies MSc

https://lnkd.in/p/gZfxfepw

Saturday, 20 June 2026

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின்
கவலை! 

என்னதான்
திட்டுதிட்டாய்
பான்ஸ் பவுடர்
அப்பிக்கொண்டாலும்

வசுவின்
கலருக்கு
சமமாக முடியவில்லையே...

தாழ்வு
மனப்பான்மையில்
தலையை
தாழ்த்திக்கொண்டது
ப்ளு பெரி...

கௌசியாவது
பரவாயில்லை
என் மனம்
வாடக்கூடாது
என நினைத்து

கருப்புச்சட்டை
போட்டுவந்து
கருப்பாய்
இருப்பது
குறையில்லை
என்று சொல்லி

என் தலை தடவி
ஆசுவாசப்படுத்துகிறாள்!

Tuesday, 2 December 2025

நர்மதா

தொலைதூர
வாழ்வின்
துயரங்கள்

சுரைக்காயா
😔😔😔
என்றதற்கும்

சுரைக்காய்
😍😍😍
என்பதற்கும்
இடைப்பட்ட
தூரம்
5954 KM...

படுக்கையில்
வைத்த சோறு
காய்ந்து வறண்டு
தள்ளிவைத்த
காலம் போய்

பாத்திரம்
கழுவி
சமைத்து
சாப்பிடும்
காலம்
வந்தபோது

அம்மா
நினைவில்
வந்தாள்...

Tuesday, 18 November 2025

விஜி EEE

ஆண்டு அதிகமாக
முதுமை வரும்

உலக நியதி!

அதை உடைத்தெறிந்த
மார்கண்டேயி எங்கள் விஜி!

பாவாடைச் சட்டையில்
பள்ளி செல்லும் மாணவி
சேலை கட்டி நின்றால்
கல்லூரி மாணவி

முல்தானி மிட்டிக்கே
முகப்பொலிவை பரிசளிப்பாள்
முல்லைப் பூவுக்கே
பல்வரிசை பரிசளிப்பாள்!

இஞ்சி இடுப்பழகி
எலுமிச்சை நிறத்தழகி!

சமையலில் நளாகினி
சாந்தத்தில் பூமாதேவி!

குறையொன்றுமில்லாது
நிறைவான வாழ்க்கை வாழ
இதயம் கனிந்த வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி!
பல்லாண்டு வாழ்க! 

லட்சுமி EEE

நூறு ரூபாய்
கொடுத்தால்
ஆயிரம் ரூபாய்க்கு
உழைக்கும்
மகா உழைப்பாளி
உழைப்பின் சிகரம்!

கல்லூரிக்கு
புகழ் சேர்க்க
கண்ணயராது
உழைப்பவள்
துணைமுதல்வர் கையில்
பரிசு வாங்கி
பத்தாமல்
பிரதமரிடம் பரிசு வாங்க
ஓடி ஓடி உழைப்பவள்!


காவல் கண்காணிப்பாளர்
மனைவி என்பதால்
கூடுதல் பொறுப்பு
வீட்டை மறந்து
விடுமுறை இல்லாது
உழைக்கும் கணவரை
சரியாக புரிந்துகொண்டு
சண்டை செய்யாத
சாமர்த்திய மனைவி!

முதல்மகளை
கரைசேர்த்து
மாமியாராக
முந்தியவள்!

நலமுடனும்
வளமுடனும்
நீடூழி வாழ்க லக்ஷ்மி! 

Thursday, 13 November 2025

சத்யப்பிரியா

படிக்காத
புத்தகத்திற்கு
முகவுரை
எழுதும்
ஆசிரியர் போல
நான் பழகிடாத
தோழிக்கு
வாழ்த்துரை
எப்படி வழங்குவேன்?

நீ வளர்க்கும்
வாழையைப்போல
வாழ்வாங்கு
வாழ்க தோழி!

வாழையின்
பாகங்கள்
அனைத்தும்
பயன்படுவது போல
நீ எடுத்துக்கொண்ட
பாத்திரங்கள்
மகள்
மனைவி
தாய்
சகோதரி
தோழி
என்று
அனைத்திலும்
பெருமை
பெறுக!

ரத்தத்தால்
வந்த
சொந்தங்கள்
தூரம்
நின்ற போதிலும்

காலத்தால்
வந்த
பந்தம்
அருகில் நிற்க
குறையொன்று
உண்டோ கண்ணே?

முழுமதியே
பகல்நிலவே
பல்லாண்டு வாழ்க!

இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் சத்யா! 💐💐💐

மரங்களின்
காதலியோ நீ
இலைகள்
தூது வருகின்றன!

உன்னை
நெருங்க
ஆசைப்பட்டு
மயங்கி
விழுந்தன
இலைகள்!

உன் நிழல்
விழுந்ததும்
ஆசுவாசப்பட்டன

முதல் முத்தம்
பெற்ற
காதலனைப்போல!

கவனமாக
வீடு செல்
உன்னைக்
கடத்தி செல்ல
கார் ஒன்று
காத்திருக்கிறது
மரத்தின்
பின்னால்
ஒளிந்துகொண்டு!

நீ ஜன்னலை
திறந்துவைத்து
ஆடைமாற்றினாயோ

ரகசியமாக
மரம்
எட்டிப்பார்த்து
உன் ஆடையின்
கலருக்கு
ஏற்றாற்போல
தன் நிறத்தை
மாற்றிக்கொண்டது!

இந்த
மரத்திற்குத்தான்
உன்மீது
எத்தனை காதல்!

❤❤❤
 

Narmadha

I don't want my daughter to be like me She should talk in the places Where did i hesitate She should say No bravely Where i said yes rel...