Thursday 25 November 2021

சலிப்பு

காதலும் சலிக்கும் 
       காலம் மாறினால்
காதலியும் சலிப்பாள் 
       கல்யாணம் ஆனால்
நட்பும் சலிக்கும்
      நகைப்பு குறைந்தால்
உணவும் சலிக்கும்
       சமைப்பவர் மாறினால்
உடையும் சலிக்கும்
       ரசிப்பவர் மாறினால் 

உரையாடல் சலிக்கும்
      ஒருவரே பேசினால்
பணமும் சலிக்கும்
     கேட்பார் குறைந்தால்
புகழும் சலிக்கும்
     புகழ்வோர் மிகுந்தால்
கருணை சலிக்கும்
     கைகள் அதிகமானால்
விளையாட்டு சலிக்கும்
     விருதுகள் குறைந்தால் 

குளிரும் சலிக்கும்
     மார்கழி நீண்டால்
வெயிலும் சலிக்கும்
    வெப்பம் மிகுந்தால்
மழையும் சலிக்கும்
    விடாமல் பெய்தால்
துணையும் சலிக்கும்
       நிம்மதி குறைந்தால்
வேலையும் சலிக்கும்
      தூக்கம் மிகுந்தால் 

சலிக்காத ஒன்றை
     சல்லடையில் தேடினேன்
கிடைக்கவே இல்லை
     மறுபடியும் சலிப்பு
எல்லாம் சலிக்கும் 
      இயற்கையின் விதி !!!


Wednesday 24 November 2021

தோழிக்கு கடிதம் -3

தோழிக்கு கடிதம் -3


அன்புள்ள தோழி
தினமும் பூக்கும் இத்தனை பூக்களை என்ன செய்கிறாய்? சாமிக்கு சாத்தி வாடிய மலர்கள், தலையில் சூடி வாடிய மலர்கள், வேஸில் வைத்து வாடிய மலர்கள் அனைத்திற்கும் மறுவாழ்வு தரவேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?. வாடிய மலர்கள் அத்தனையும் சேர்த்துவைத்து காம்புநீக்கி காயவைத்து, வேலையில்லாத நேரங்களில் மிகவும் 'போர'டிக்கும்போது மிக்ஸி யில் அரைத்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக்கி மெல்லிய ஈர்க்குச்சியை சுற்றி கைகளால் உருட்டவும். இதை நிழலில் உலர்த்தி பாலித்தினில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று குச்சிகள் உன் வீட்டு அறைகளை வாசப்படுத்தும். உன் உழைப்பில் உருவான ஊதுவத்திகளுக்கு இன்னும் வாசனை கூடும். நீ மிகவும் Busy என்றால் உன்னைச்சுற்றி இருக்கும் இன்னொருவருக்கு வாய்ப்பை கொடு. மலருக்கும் இன்னொரு மனிதருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.

பிரியங்களுடன்
தெய்வானை

Sunday 21 November 2021

அளவும் காலமும்

பசிக்கும்போது 
       கொடுக்காத பாலும்
பசிக்காதபோது 
       கொடுக்கும் பாலும் வீணே!! 

தேவையான நேரத்தில் 
       கிடைக்காத பாராட்டும்
தேவையில்லா நேரத்தில் 
       கிடைக்கும் பாராட்டும் வீணே 

நேரத்தில் கிடைக்காத நீதி
     நேரமாகி கிடைத்த நீதி 
வாதியைப் பொருத்தவரை
      இரண்டும் வீணே! 

மனம் விரும்பாத நேரத்தில்
     ஒலிக்கும் இசையும்
மனம் விரும்பும் நேரத்தில்
     கேட்கும் சத்தமும் வீணே

ஐந்து வருடம் உழைத்தவனுக்கு
     ஆயுளுக்கும் ஊதியமும்
ஐம்பது வருடம் உழுதவனுக்கு
     ஐந்து ரூபாய் எலிமருந்தும் வீணே

உடலே அசைக்காதவனுக்கு
      உணவுவகை ஐந்தாறும்
ஓடி ஓடி உழைத்தவனுக்கு
      ஒரு பிடி சோறும் மோரும் வீணே

அளவும் காலமும்
      மிகமிக அவசியம்
அளவு மிஞ்சினால்
      வேலையில்லை என்பர்
காலம் கடந்தால்
      தேவையில்லை என்பர்

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ
ஞாயிற்றுக்கிழமை வேலைகளோ

அடுத்த சனிவரை தேவையான
மாவு அரைத்து முடியலையோ

மதிய வேளை சாப்பாட்டுக்கு
மட்டன் பிரியாணி தயாரிப்போ

வாரம் முழுவதும் சேர்த்துவச்ச
அழுக்கு மூட்டை அலசலோ

அவசரமாக அழைப்புவந்து
அம்மா வீட்டுக்கு பயணமோ

அடுத்தமாத கல்யாணஅழைப்புக்கு
அன்பளிப்பு வாங்க ஷாப்பிங் கோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

ஆபீஸின் மெயிலுக்கு
ஆசுவாசமாய் பதில் டைப்பிங் கோ

அடித்து அடித்து திருத்தி
ப்ராஜக்ட் ரிப்போர்ட் ரைட்டிங் கோ

திரையரங்கில் திரைப்படமோ
நெட்ப்ளிக்ஸ் ல் சீரியலோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

Friday 19 November 2021

தோழிக்கு கடிதம் - 2

அன்புள்ள பார்கவி
நீ ஒரு நல்ல பாடகி. குரல்வளம் அருமை.
நீ கேட்கும் , பாடும்,பாடல்களின் அருமை பெருமைகளை, பாடல் ஆசிரியர் வரிசையில், இசை அமைப்பாளர் வரிசையில் ஒரு பக்க அளவில் Samsung Notes ல் type செய்து Google blogger ல் Upload செய்யவும். Gmail id இருந்தால் போதுமானது. Google apps  ல் Blogger app search செய்து போனில் Install செய்யலாம். மேலும் AnchorFM , Spotify இரண்டும் Playstore ல் கிடைக்கும். போனில் Download செய்யவும். Anchor FM ல் நீ பாடி பதிவுசெய்து Spotify ல் Publish செய்யலாம். Spotify link ஐ உன் Blog லும் ,D block லும் Share செய்யலாம். படிப்பது பிடித்தவர் Blog ஐயும், கேட்பதை பிடித்தவர் Spotify யும் தொடரட்டும்.  நேரம் கிடைக்கும்போது பழைய , புதிய, நம் காலத்திய பாடல் விமர்சனங்கள் சேர்த்துக்கொண்டே போகலாம்.  பாட்டில் உனக்கு பிடித்த வரிகள் பற்றி, அந்த சீனில் நடிகரின் Expressions பற்றி  கருத்துகள் அனைத்தையும் பதிவுசெய். எப்படியும் உனக்கு 60 Followers கண்டிப்பாக கிடைப்போம். முதல் Follower  ஆக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். மில்லியன் Subscribers, மில்லியன் Views முதலில் எண் ஒன்றிலிருந்து தொடங்கப்பட்டவையே!. ரங்க நாயகி பட்டம் தாண்டி "பார்(ஆளும்)கவி" அடையாளம் வேண்டும் .  WE ARE WAITING !!! 

Thursday 18 November 2021

தோழிக்கு கடிதம் - 1

அன்புள்ள விஜி 

நீ படிக்கும் புத்தகங்களின் விமர்சனம் ஒரு பக்க அளவில் Samsung Notes ல் type செய்து Google blogger ல் Upload செய்யவும். Gmail id இருந்தால் போதுமானது. Google apps  ல் Blogger app search செய்து போனில் Install செய்யலாம். நேரம் கிடைக்கும்போது விமர்சனங்கள் எழுதி Upload செய்யலாம். நான் உன்னை வாசித்ததில் தெரிந்துகொண்டது நீ ஒரு நல்ல விமர்சகர். கண்கள் காந்தம் போல இரும்பான விசயங்களை ஈர்க்கிறது. புத்தகத்தில் உனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பற்றி, எழுத்தாளர் சொல்ல வந்த விசயங்கள், உனக்கு உடன்பாடு இல்லா கருத்துகள் அனைத்தையும் பதிவுசெய். எப்படியும் உனக்கு 60 Followers கண்டிப்பாக கிடைப்போம். பிடித்த சினிமாக்கள்,  பிடிக்காத மனிதர்கள் அத்தனையும் பதிவு செய்.  மில்லியன் Subscribers, மில்லியன் Views முதலில் எண் ஒன்றிலிருந்து தொடங்கப்பட்டவையே!. Mrs Vijay, Neha's mother  தாண்டி " The Vijaylaxmi" அடையாளம் வேண்டாமா? . கிளம்பியாச்சா?  Good Good. 

Wednesday 17 November 2021

பாஞ்சாலி

இல்லை என்று சொல்லாத
     தரும சிந்தனை(தருமன்)
கொண்ட நோக்கத்தில்
    தெளிவான அறிவு(அர்ச்சுனன்)
எதிரில் நிற்போரை
   வெல்லும் உடல்வலிமை(பீமன்)
வயிர்வழி உயிர் தொட
   சமையலில் புலமை(நகுலன்)
எதிர்காலத்தை கணிக்கும்
   துல்லிய திறமை(சகாதேவன்) 

ஐந்து குணத்தையும் மணப்போர்
    வாழ்வில் சிறப்பர்
பெண்ணை துயில் உரிக்க
    காத்திருக்கும் சபையில்
கிருஷ்ணர் வந்தாலும்
    வராவிட்டாலும்
கௌரவர் மத்தியில்
    எப்போதும் ஜெயிப்பர்

ஓடு.......தேடு.......


ஜெயிக்கணுமா
     கண்ணம்மா
ஜெயிச்சுக்கிட்டே 
     இருக்கணுமா 

ஒருமுறை 
     ஜெயித்தால் போதாது
ஒவ்வொரு முறையும்
      ஜெயிக்கணுமே
முதல்முறை தோற்றால்
      பாதி கூட்டம் ஓடும்
இரண்டாம் முறை தோற்றால்
      மீதி கூட்டம் ஓடும் 

முயற்சித்தே இரு
      பயிற்சித்தே இரு
பயத்துடனே என்றாலும்
       காலை முன்னே வை
ஓடிக்கொண்டே இரு
       தேடிக்கொண்டே இரு
ஓய்வென உட்கார்ந்தால்
        ஓரங்கட்டப் படுவாய் 

சூரியன் ஓய்வு என்றால்
       வெளிச்சம் ஏது நமக்கு
நொடிமுள் ஓய்வு என்றால்
        நேரம் ஏது நமக்கு
இதயம் ஓய்வு என்றால்
        வாழ்வு ஏது நமக்கு
உழவன் ஓய்வு என்றால்
        உணவு ஏது நமக்கு 

உன்னைச்சுற்றி எல்லாமே
       ஓடிக்கொண்டு இருக்கும் போது
உனக்கு மட்டும் எதற்கு
      ஓய்வு வேண்டும் என்கிறாய் 
ஜெயிக்கணும் என்றால்
        ஓடிவிட்டு நில்
ஜெயித்து கொண்டே இருக்க
       ஓடிக்கொண்டே இரு

ஆனந்த கிறுக்கல்



சேர்ந்துசிரித்த ஞாபகமோ
சண்டையிட்ட ஞாபகமோ
விடுதியில் தவித்தபோது
சோறு தந்த ஞாபகமோ
கரூரில் இருவரும்
படம் பார்த்த ஞாபகமோ
கிரிக்கெட்டும் கிட்டிபுல்லியும்
விளையாண்ட ஞாபகமோ
சைக்கிளில் டபுள்சில்
காமாட்சிபுரம் சென்ற ஞாபகமோ

என்னதான் நினைப்போ
இப்படி கிறுக்கி வைக்க
அத்தை மகன் ஞாபகமாய்
ஆனந்தின் கிறுக்கல்கள்

Tuesday 16 November 2021

அப்பா

ஊருக்குள்ள பிரச்சினையோ

உறவுக்குள்ள மனவருத்தமோ

ஓடி வந்து தீர்த்து வைப்பார் 


ஊரெல்லாம் சுற்றி வந்த

சைக்கிளும் டீவிஎஸ் ம்

உம் அருமை மறந்திடுமா

வாழ்வெல்லாம் பயணித்த

உம்முடனே மறைந்திடுமா 


சாந்தி வந்து சேருமோ

மீந்திருப்போர் வாழ்விலே 


நிதானமும் நிம்மதியும்

சொத்து போல 

சேர்த்து வைத்தார்

சொந்தங்களை கூட

சொத்தாகவே பார்த்தார்

அமரவைத்து புத்திமதி

இன்முகத்துடன் சொன்னார்!

ஒத்தை லட்சம் கேட்டால்

இரண்டாய் தந்துவிட்டு

இன்னும் வேண்டுமா,

உம்மையன்றி யார் கேட்பார்?

பரிசும் பணமுடிப்பும்

பண்டிகையில் யார் தருவார்?

எப்ப வர்ரே எப்ப வர்ரே

நூறுமுறை யார் கேட்பார்? 


காண முடியாமலும் 

பேண முடியாமலும்

கண்ணில் நீர் தந்து

விண்ணைத் தொட சென்றவரே

விம்முவது கேட்பீரோ



இப்படிக்கு 


ஈற்றும்

பேற்றும்


ஆலமரம்

பலமொழியில் பாடி
மனமயக்கும் 'பாரு'
பீரே குடிக்காமல்
போதையேற்றும் குயிலு 

வேராய் இருந்தாலும்
வெளிய வந்து சிலநேரம்
விழுதோடு விளையாடி
நகையாடும் கிளி 

நடப்பதையெல்லாம்
மௌனமாய் ரசித்து
அடக்கிவாசிக்கும் 
அக்கரை காகங்கள் 

காடையை காணோம்
கவுதாரியை காணோம்
மயில் எங்கே கிளி எங்கே
கணக்கெடுக்கும் கொக்கு


வேலை பளு அதிகமாக
வீட்டுகாரர் காரமாக
ஆசுவாசப் படுத்த
பாய்ந்து வரும் மைனா 

உமையாள் மகா ஈஸ்வரி 
திரிந்து உமாமகேஸ்வரி 
ஆனதை போல
மோகமும் மோகனமும் 
திரிந்து சீர்கெட்டு 
தவிக்கும் செங்குருவி 

கண்டம் தாண்டி
பறந்து வரும்
அமெரிக்கா குருவி
ஆலம்பழம் சாப்பிட்டு
ஆட்டு பிரியாணி பங்கிட்டு
திரும்பி போகும் குருவி 

இளைப்பார நினைக்கும்
பலவித பறவைகள்
பறந்துவந்து
பார்ட்டி தந்து
பாடி ஆடி பறக்கும் 

பிறந்த நாளோ
கூட்டை விட்டு 
பறந்தநாளோ
அத்தனைக்கும் 
வாழ்த்துப் பா
தவறாமல் வந்து பாடும் 

சிலநேரம் கப்சிப்
இலையுதிர் காலம் 
பலநேரம் வளவள
வசந்தகாலம்


டிஜிட்டல் ஆலமரம்
'டி' ப்ளாக் என்று பெயர்

மரணத்தை வென்றார் உண்டோ


இருநூறு வருடங்கள்
     வாழ்ந்தவர் உண்டோ
உடைந்து நிற்கும்
     அரண்மணைகள் சாட்சி
உலகையே ஆண்ட
      அலெக்சாண்டர் சாட்சி
உத்திரமேரூர் 
      கல்வெட்டு சாட்சி
உள்ளூரில் வாழ்ந்து கெட்ட
      ஜெயா அம்மா சாட்சி
வந்தவரெல்லாம் தங்கினால்
        வருவோருக்கு இடமேது
போவோரெல்லாம்
        மீண்டும் வருவர்
உருமாறி உறவுமாறி
        மகனாய் மகளாய்
பேரனாய் பேத்தியாய்!!
      
  
இருப்பு இறப்பு
       இரண்டும் நிலையில்லை
சாவும் சோகம்
        சாகா வரமும் சோகம் 
இயற்கையிடம் தோற்றுவிடு
        இயன்றவரை வாழ்ந்துவிடு 
மனதை மடைமாற்று
        மயக்கம் தெளிந்துவிடும்

link mechanism

https://www.linkedin.com/posts/ugcPost-6865608720018153472-7TQJ

Monday 15 November 2021

அப்பா


மூவர் உயிர் வளர்த்து
மூவாயிரம் மூளை வளர்த்து
மகனாய் மாண்பு வளர்த்து
தகப்பனாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தவித்து நின்றார்!

ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
காண முடியுமோ இனி
உம்மைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உம் பெருமை?


ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா

ஆசையாய் வளர்த்த மகன்
செட்டிநாட்டில் கொடிகட்ட
கடைசியாய் வந்த மகன்
கால்மேட்டில் காத்து நின்றார்

பூரணமும் கரையுமே
பரிமளமும் வாடுமே
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே

நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
யாரிடம் கேட்பேனோ?
கருத்தில் நீங்குமோ
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
பத்தாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?

காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றீரே
விம்முவது கேட்பீர்


இப்படிக்கு

ஈற்றும்
பேற்றும்

Sunday 14 November 2021

எங்கடீ போனீக

எங்கடீ போனீக
ஒருத்திய கூட காணோம் 

மழை பேஞ்சு
கம்பம் சரிஞ்ச 
சேதி கேட்டு போனியோ
மந்திரி வாரானு
மாலை வாங்க போனியோ
கடலூரு வாக்கப்பட்ட
கரண்ட் ஆபிஸரம்மா 

இன்போசிஸ் லெச்சுமிய
பொழுதிறங்கியும் காணல
திண்டுக்கல்லு போனவ
இன்னுமா திரும்பல
வழில எங்கனவும்
சோட்டுப்பொண்ண கண்டியோ
நலம் விசாரிக்க நின்னியோ 

பெங்களூரு சலிச்சுதுனு
பூனா போன பொண்ணே
பூரியும் பாவ் பாஜியும்
புளிச்சு போகலயா இன்னும்? 

புள்ள மார்க் என்னாச்சு
துப்பு சொல்லு யோகு
நமக்கெல்லாம் ஊசி
போடுமா இல்லையா 
ஐஸ்இட்லி தாரேனு
போங்கு காட்டிபோனவ
அக்சென்டர தவிர
அத்தனையும் மறந்துபோனா!

வத்தக்குழம்பு வச்சு
வெண்டக்கா பொரிய வச்சு
வயிறு நெறைய தந்தவ !
சிங்கப்பூரு தாண்டி
மலேசியா போனாளோ
லோகேஷ பாத்து வர! 

எங்கடீ போனீக
ஒருத்தியகூட காணோம் 

கவுசிக்கு ஊறுகா 
கடன் குடுக்க போனவ
தக்காளீ வாங்கிட்டு
இன்னுமா திரும்பல?
மேலாண்மை படிக்கிறேனு
மேகத்தோடு பறந்தவ
இன்னுமா இறங்கல 

ஒரு சேதிய காணோம் 

வேல செஞ்சு மாளல னு
நெஞ்சு பொருமனவ
கால நீட்டி  உக்கார
நேரம் இன்னும் வரலையா! 

வீடு முழுக்க பூவு வச்சு
வீதி முழுக்க வாசம்
வண்டு தேடி வந்துருச்சு
செனட் டோட சேதி காணோம் 

அந்தமானு அழகு னு
அங்கனயே தங்குனவ
மழையும் புயலும்
வந்தாலும் 
மதுர வர மறுக்குறா

ஏன் எப்படி எதுக்கு எங்கே
நூறு கேள்வி கேட்ட கிளி
பணி சுமையா மன சுமையா
பல நாளா கேள்வி காணோம்

படமெல்லாம் ஒன்னு சேத்து
பலசுவையா தந்த புள்ள
பாட்டு மாத்தி மாட்டுனவ
ஏபிசி ஜூஸு போட
ஆப்பிள் வாங்க போனாளோ

எங்கடீ போனீக
ஒருத்திய கூட காணோம்


அன்பளிப்பு

அன்பை அள்ளி அள்ளி
அளித்தனர்
அலங்காரங்களாய்
அன்னமாய் இனிப்பாய்
இன்முகத்துடன்
இன்னபிறவும் வந்தன
இருபது வருடங்களுக்கும்
மொத்தமாய் சேர்த்து
மொய் எழுதினர்
வராத திருமணத்திற்கு
வட்டியாய் சேர்த்து
உள்ளம் மட்டுமா நிறைந்தது?
இல்லை கண்களும் கூட
சொல்லித் தீருமோ
மனம் படும் பாட்டை !!!
நிலைத்திடவேண்டும்
நீடூழீ நட்பு! !!

Metrology & Instrumentation

Metrology & Instrumentation

Fluid Mechanics






Saturday 13 November 2021

Basic Engineering Workshop Technology

 




https://drive.google.com/file/d/1kqqYwmyXMJtr_wEv67FH8io_KhoLNc00/view?usp=drivesdk


Workshop Technology


Fatigue failures in Pumps

https://drive.google.com/file/d/1kbj6MLdCej_XiyDyEPm9iCM0lBC6EBsk/view?usp=drivesdk

Fatigue Failures

https://drive.google.com/file/d/1kbj6MLdCej_XiyDyEPm9iCM0lBC6EBsk/view?usp=drivesdk

Interview Questions for Mech.engineer




Wednesday 10 November 2021

டேட்டா

ஆக்சிஜனாய் டேட்டா
அதுவின்றி ஐந்துநிமிடம்
யாரும் யாராகவில்லை
கையோ காலோ
கண்ணோ எதுவோ
இழந்தது போல தவிப்பு
2 ஜீபிதீர்ந்தபின்
பசித்தது தெரிந்தது
வைஃபை நின்றதும்
துணி துவைக்கனும்
காய்கறி வாங்கனும்
வாக்கிங் போகனும்
எல்லாம் வரிசைகட்டி
ஞாபகம் வந்தது 

உற்றார் உறவினர்
ஞாபகம் வந்தது
'கால்' பண்ணி நாளாச்சே
நம்பர் தேடி
கதைக்க தோன்றியது

Msc Pr Expt 6 Annealing

MSC PRACTICAL EXPERIMENT 6

Monday 8 November 2021

Mech.engg.Drawing Questions

Page 1 
Page.2
Page 3
Page 4

Page 5


Page 6

Page 7


Page 5







கேள்வி இரண்டு வகை ?....?



சௌக்கியமா?
நலமா தெரிந்துகொள்ள
நலமோ தெரிந்துகொள்ள
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை பொறாமை 

சாப்பிட்டயா?
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை தீர்ந்துபோச்சா? 

படிச்சியா?
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை அதிக மார்க் எடுத்துடுவாளோ? 

காசு இருக்கா?
அக்கறையும் உண்டு
வச்சுருக்கானோ வும் உண்டு

போனில்  "எங்கிருக்க"
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை சுற்றலோ? 

வாட்ஷ் அப் ல என்ன பண்ற?
முதல் வகை ப்ரண்ட்ஸ் உடனா?
இரண்டாம் வகை வேறு யாராவது?



Sunday 7 November 2021

சீனமொழி கற்கலாமா?

சமீபத்தில் " எளிதில் சீனமொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள் " என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் இந்திய அயலுறவு பணியில் அதிகாரி. பயணி என்ற புனைப்பெயரில் வலைஉலகில் உலா வருபவர். தான் உண்டு தன் அலுவலக வேலையுண்டு என்றில்லாமல் வேலையின்எல்லையைவிரிவாக்கிக்கொண்டவர். செல்லும் தேசங்களின் நல்ல விசயங்கள் நம் தேசத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று திரைகடல் ஓடி அறிவு திரவியம் கொணர்பவர். 

புத்தகம் பற்றி என் பார்வை: 

தமிழ் வழி சீனமொழி கற்றுத்தருகிறார். சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சீனர்கள் அதிகம் வாழும் மற்ற தேசங்களுக்கும் படிக்க செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் , வியாபார காந்தங்களுக்கும், புதிதாக குடியேறுபவர்களுக்கும்,வேலைநிமித்தம் செல்பவர்களுக்கும் பயனுள்ள வழிகாட்டி நூல். 

பயணியின் நகைச்சுவை கலந்த உரை நடையும் எழுத்தும் பஸ் கண்டக்டரைப்போல " வழியில நிக்காதே, உள்ள போ , மேல போ" என்றது. முயற்சியும் முனைப்பும் புதிதாய் ஒன்றை கற்றுக்கொள்ள முக்கியம் என்று அடிக்கோடு இடுகிறார் அங்கங்கே!. 



நீ ஹாவ் மா? - நீ நலமா? 
வோ  + ஹன் + ஹாவ் =  நான் + ரொம்ப + நலம் 

உச்சரிப்பு : ஷி(ழ்) முதல் எழுத்தை "தேர்வு முடிந்ததா என்ற கேள்விக்கு சொல்லும் பதில் போல சத்தமாக சொல்ல வேண்டும், இரண்டாம் எழுத்தை மார்க் என்னாச்சு கேள்விக்கு சொல்லும் பதில் போல குறைவான சத்தத்தில் சொல்ல வேண்டும் " 
இப்படி பக்கத்துக்கு பக்கம் நிறைய அசத்தல்கள்.

மிக மிக எளிதாக இன்னும் நிறைய வாக்கியங்கள் கற்றுத்தருகிறார் ஆசிரியர்.
தமிழில் எழுதி விளக்குவது எளிதில் மனப்பாடமாகிறது.
இடையில் சுவாரஸ்ய கதைகளும் சேர்த்திருக்கிறார். சிரித்துக்கொண்டே படிக்கலாம். 

சிரிக்கவும் சீனமொழி கற்கவும் தயாரா??
காலச்சுவடு பதிப்பகம். வலையில் தேடுங்கள்.


நீ ஹாவ்    கே ஸாத் 

தெய்vanai

https://anchor.fm/s.deivanai/episodes/ep-e19ubmp

https://open.spotify.com/episode/56da9pjnJOtgwCXYg7eiY0?si=c8S4pGv7TjWoir3rbPQckA&utm_source=copy-link

Thursday 4 November 2021

அப்பா எங்கே தோற்கிறார்?

நண்பன் மகள் டாக்டர் ஆனாள்
நீயும் டாக்டர் ஆகணும் என்றார்

மகள் சொன்னாள் டிசைனர் ஆவேன்
அப்பா சொன்னார் ப்ராடக்ட் டிசைன்
மகள் சொன்னாள் யூசர் இன்டர்பேஷ்

நண்பன் மகளுக்கு டாவோ வில் வேலை
நீயும் அங்கே வாங்கனும் என்றார்

அம்மா சொன்னார் 
இருவர் துறையும் வேறுவேறு
இவள் துறையில் சிறக்கட்டும்!

நண்பன் மகன் ஐர்லேண்ட் சென்றான்
நீயும் போ இங்கிலாந்து என்றார்
மகள் சொன்னாள் ஜெர்மன் செல்வேன்

கடைசியில் அப்பா சொன்னார்
நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை

என் பேச்சுக்கு மரியாதையில்லை
மகள் சொன்னாள் என் விருப்பம் யாருக்கும் புரியவில்லை

அவர் சொல்வதை கேளேண்டீ!

புருசனுக்கு சப்போட்டா 
முகத்துக்கு நேராய் கேட்டாள்

விடுங்க அவளுக்கு பிடித்ததை படிக்கட்டும் என்றேன்
எப்பவும் மகளுக்கு சப்போர்ட் என்றார் 

இருவருக்கும் இடையில்
மத்தளமாய் அம்மா

இதில் யார் சரி? யார் தவறு?
அப்பாவின் அணுகுமுறையா?
மகளின் பிடிவாதமா?

Wednesday 3 November 2021

Important Thermodynamic Concepts

நட்பூ...

வாசமாய் இருந்தது
மிதப்பதாய் இருந்தது
ஒருமணி நேரத்தில்
எவ்வளவு கதைகள்
அடிக்கடி கூடினால்
ஆயுளும் கூடும்
மனநலமும் கூடும்
சந்தித்ததும் சந்தோஷித்ததும்
பெரும் "பாக்கிய"மே
அடிக்கடி கூடும்
மகாவுக்கும் மற்றவருக்கும்
சத்தியமாய் சொல்கிறேன்
ஆயுஷ்மான் பவ!!!
சுயநினைவில் இல்லை
போதையில் நடக்கிறேன்.
மிகையில்லை
அனுபவித்தவர்களுக்கு புரியும்
மற்றவர் அனுபவிக்க
முயற்சிக்கவும்

இப்படிக்கு
மேகங்களில் இருந்து
- தெய்வானை

Tuesday 2 November 2021

Msc practical Experiment 8 Tempering a steel specimen


https://docs.google.com/document/d/1w7CByYMWJbYNnKSfgl7KsZJSjw9-jOZ8/edit?usp=sharing&ouid=108408514462035917942&rtpof=true&sd=true

MSc practical Experiment 8

MSc Practical Experiment 7 Normalising the given Specimen

 https://docs.google.com/document/d/1IQ0xhrr2XzguoUOnd2wgF_bfB2PgEHn-/edit?usp=sharing&ouid=108408514462035917942&rtpof=true&sd=true

Msc chap 2 continue..... Corrosion Types and prevention


 https://drive.google.com/file/d/1Ai1iOHFT-MoqB7Q9e9gSsZHgAv2pO2Rc/view?usp=sharing

Multiple choice question

https://www.linkedin.com/posts/metalurgical-engineering_basic-qustion-ndt-activity-6861127469152428032-DRpJ

MSc Practical Experiment 5 Preparation of specimen for microscopic Examination




1076 steel etched with Nital
 under polarized light

Copper alloy 

Grey cast iron

Msc chap 3 Types of Steel making process








https://youtu.be/a-nLL_6SiO0






Monday 1 November 2021

Msc chap 1 Introduction to material science

MSc chap 1 Introduction to material science


https://docs.google.com/presentation/d/1vtS8TfzVFLg5wM61LmIYwMfwzsVXElVq/edit?usp=sharing&ouid=108408514462035917942&rtpof=true&sd=true


Types of materials.



Msc chap 8 Fundamentals of Heat treatment

Msc Chap 8 heat treatment

 


காயம்


காயங்களிலிருந்து

தேன் வடியுமோ?

இன்பேச்சு வருமோ?

பொதிமாடு

சிரிக்குமோ?

காவடிக்காரன்

நாட்டியம் நயமோ?

சுமைகளை குறை

சிறகு விரிப்பேன்

சிரிக்க சிங்காரிக்க

படிக்க பாட

நடனமிட சுற்ற

ஆயிரம் உண்டு

ஆசை எனக்கும்!

பி.......ரிவு

நிஜத்தில் நெருங்கவும் இல்லை

நினைவில் நீங்கவும் இல்லை

எழுத்தும் வலையும்

இணைத்தது சில  காலம்

பிரிவு மீண்டும்.......

நினைவுகள் தொடரும்

நிழல்களாய்

அழுவதா சிரிப்பதா

சுகம் ஒன்று வந்தால் 

மற்றது போகிறது

சமநிலையில் மனம் 

வாழ்த்து வராது

நகைப்பு வராது

அரசியல் வராது

நடப்பு தெரியாது

வலிகள் தெரியாது

வானம் பார்த்த பூமியாய்

வாழ்க்கை கழியும்

.

.

.

.

பெரும் மூச்சுடன்

வாழ்கவளர்க!

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...