Showing posts with label Motivation. Show all posts
Showing posts with label Motivation. Show all posts

Tuesday, 7 December 2021

ஐம்பதிலும் அசத்தலாம்

ஐம்பதிலும் அசத்தலாம்



சமீபத்தில் எல்லாருக்கும் பரிச்சயமான பெயர் ஃபல்குனி நாயர். 49 வயதில்  பாதுகாப்பான பேங்க் வேலையை உதறிவிட்டு தைரியமாக நைக்கா கம்பெனியை துவங்கியவர். 58 வயதில் பில்லியனர் ஆக சிக்ஸர் அடித்தவர். சாதிக்க வயது தடையில்லை என்று நிரூபித்த சாதனைப் பெண்மணி. நமக்கு இப்போது 43 தான் ஆகிறது. என்னென்ன சாதிக்கலாம்!  எவ்வளவு சாதிக்கலாம்!  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!  கிளம்புங்கள் தோழிகளே!




Wednesday, 17 November 2021

ஓடு.......தேடு.......


ஜெயிக்கணுமா
     கண்ணம்மா
ஜெயிச்சுக்கிட்டே 
     இருக்கணுமா 

ஒருமுறை 
     ஜெயித்தால் போதாது
ஒவ்வொரு முறையும்
      ஜெயிக்கணுமே
முதல்முறை தோற்றால்
      பாதி கூட்டம் ஓடும்
இரண்டாம் முறை தோற்றால்
      மீதி கூட்டம் ஓடும் 

முயற்சித்தே இரு
      பயிற்சித்தே இரு
பயத்துடனே என்றாலும்
       காலை முன்னே வை
ஓடிக்கொண்டே இரு
       தேடிக்கொண்டே இரு
ஓய்வென உட்கார்ந்தால்
        ஓரங்கட்டப் படுவாய் 

சூரியன் ஓய்வு என்றால்
       வெளிச்சம் ஏது நமக்கு
நொடிமுள் ஓய்வு என்றால்
        நேரம் ஏது நமக்கு
இதயம் ஓய்வு என்றால்
        வாழ்வு ஏது நமக்கு
உழவன் ஓய்வு என்றால்
        உணவு ஏது நமக்கு 

உன்னைச்சுற்றி எல்லாமே
       ஓடிக்கொண்டு இருக்கும் போது
உனக்கு மட்டும் எதற்கு
      ஓய்வு வேண்டும் என்கிறாய் 
ஜெயிக்கணும் என்றால்
        ஓடிவிட்டு நில்
ஜெயித்து கொண்டே இருக்க
       ஓடிக்கொண்டே இரு

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...