Friday 4 February 2022

Steam Turbine

https://www.linkedin.com/posts/mechanical-engineering-world_question-answers-on-steam-turbines-activity-6895059070194204672-vyQG

Thursday 3 February 2022

வேலைக்கு போகும் பெண்ணின் மனநிலை

காலையில் என்னடா வாழ்க்கை என்று தோன்றியது. வேலைக்கு போகவேண்டாம் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனி என்று சொல்லும் ஆண் தெய்வமாக தெரிந்தான். வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு எத்தனை சவால்கள்?. சீ என்ன பிழைப்பு பிழைக்கிறோம் என்று ஆத்திரமும் அழுகையும் வந்தது. கண்ணீர் வழிந்து சாப்பாட்டு தட்டில் விழுந்தது. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு, சம்பள உயர்வுக்கு STC பண்ண வேண்டாம், APAR ல் 100 மார்க் வரவில்லை என்று DD யிடம் கெஞ்ச வேண்டாம். M.Tech பண்ண வேண்டாம், phd பண்ண வேண்டாம், paper publications ஆகவில்லை என்று கவலை பட வேண்டாம். சரியான நேரத்தில் முக்கியமான தகவல் சொல்லாமல் கழுத்தறுக்கும் colleague நினைத்து வருத்தப்பட வேண்டாம். அதிகமாக வேலை வாங்கிவிட்டு ACR ல் கையெழுத்து போடும்போது இழுத்தடிக்கும் பிரின்சிபால் மீது கொலைவெறி கொள்ள வேண்டாம். மகன் பரிட்ச்சைக்கு படித்தானோ இல்லை வீடியோ கேம்ஸ் விளையாடிகொண்டு இருப்பானோ, மகள் எழுந்து சாப்பிட்டாளோ இன்னும் தூங்கிக்கொண்டு இருப்பாளோ ஆபீசில் இருந்துகொண்டு கவலை படவேண்டாம். எத்தனை எத்தனை வேண்டாம்கள். கொடுத்து வைத்த பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் . சாயந்திரம் 3pm மணிக்கும் 6 pm மணிக்கும் காலை சாப்பாடு சாப்பிடும் அவசியம் இருக்காது. ஆறிபோன டீ குடிக்கும் அவசியம் இருக்காது. காய்ந்து போன சப்பாத்தியும், நசத்து போன தோசை யும் நின்றுகொண்டே திணித்து கொண்டு ஓடும் நிலை இருக்காது. வீட்டை மட்டும் பார்த்து கொள், சொல்லும் ஆணுக்கு சிலை வைத்து கும்பிடலாம் என்று தோன்றுகிறது. நமது முன்னோர்கள் நன்றாக யோசித்தே பெண்ணை வீட்டில் வைத்து போற்றி பாதுகாத்தார்கள். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து வீட்டை அமைதியாகவும், அழகாகவும் பார்த்துக்கொண்டால் போதும் என்று நினைத்தார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் திருப்தியும் நிம்மதியும் கிடைக்காது என்று உணர்ந்து கிடைத்த சொற்ப சம்பளத்தில் சந்தோசமாக வாழ கற்றிருந்தார்கள். பாட்டனும் முப்பாட்டனும் புத்திசாலிகள். நம் அப்பாக்கள் அதிகமாய் யோசிக்கவில்லை. பெண் படித்தால் போதும், சம்பாதித்தால் போதும் சந்தோசமாய் இருப்பாள் என்று நினைத்துவிட்டார்கள். 

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...