பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலே புரிந்துகொள்ளாமலே முழு வாழ்க்கையை கழித்துவிடுகிறோம். நான் பேசினால் ஒரு பயல் கேட்பதில்லை என்பவர்கள் தங்கள் வார்த்தைகளை உற்று நோக்குங்கள். என் பேச்சிற்கு மரியாதை இல்லை என்பவர்கள் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள். சுடாத வார்த்தைகளா அவை?
கருத்துக்கள் முரண்பட மூக்குக்கு மேல் கோபம் இருவருக்கும் இரண்டுநாள் மௌனமொழி மூன்றாம்நாள் மாலையில் காபியோடு பக்கோடா டேபிள்மீது அவள் வைக்க பிஸ்தா குல்பியை லேப்டாப் மீது அவன் வைக்க அத்தோடு முடிந்தது அவர்களுக்கான ஊடல் அளந்து போட்ட உப்பாக!
அரசியல் வேண்டாம் அவன் சொல்ல அதெல்லாம் முடியாது இவள் சொல்ல வாய்மொழி சூட்டின் செல்சியஸ் குறைய நான்குநாட்கள் ஐந்தாம்நாள் வீட்டுக்கு நண்பர் குடும்பம் வந்து நிற்க சிக்கன் வாங்கி வரவா மீன்வாங்கி வரவா என்பதோடு ஊடல் முடிந்தது
அளவாக பெய்யும் மழை அளவாக சுடும் சூரியன் அளவாக குளிரும் நிலா அளவான ஊடல் கலை அத்தனையும் அழகு அளவுக்குள் அடங்கிநின்றால்! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!
மேஜை எதிரே ஆப்தமாலஜிஸ்ட் கண்ணில் என்ன பிரச்சினை கேட்டார் முன்முற்ற புல்வெளி கறுப்பாக தெரிகிறது இடையிடையே சில வெண்புல்லும் தெரிகிறது என்றேன் உங்கள் கண்களின் கண்ணாடி சென்னையில் இருக்கிறது இன்டிகோவில் வரவழைக்கிறேன் சிரித்தபடி சொன்னார்
தோட்டத்து குண்டுமல்லியில் கறுப்பு பாவையை காணவில்லை என காவலாளியை அழைத்து என்ன காவல் செய்கிறாய் மல்லியில் உள்ள பாவையை யாரோ திருடி சென்றுவிட்டனர் திட்டியதை வாங்கிக்கொண்டு திருதிருவென முழித்தார் கண்களில் தானே உண்டு இவரென்ன மல்லியில் தேடுகிறார் நினைத்தபடி சரிம்மா இனிமேல் ஒழுங்காக காவல் செய்கிறேன் என சொன்னபடி நகர்ந்தார்
ஃபுரூட் சாலட் செய்ய கையில் ஆப்பிளை எடுத்த கங்காவை பார்த்துதோலை உரி ரத்தம் வரப்போகிறது என்று கத்தினேன் அவளோ கன்னத்தையா உரிக்கிறேன் பழத்தை உரிக்க ஏன் பதற்றப்படுகிறேன் என கேட்டாள் அவளிடம் சொல்லவில்லை அது அவரின் கன்னம் போல தெரிவதை!
என் கண்களுக்கு என்னதான் ஆயிற்று எதுவும் சரிவர தெரியவில்லையே யாரிடம் சொல்வது எவரை கேட்பது?
கண்கள் உறுதி செய்த காதலை வாய்மொழியில் கொண்டுவர தெரியாமல் சம்பந்தமில்லாத வார்த்தைகள் கொண்டு தொடங்கிய பேச்சு 'காபி வித் இந்துவா' இன்றும் காலையில் சொல்லி பார்க்கிறேன்
நீயும் பேச தெரியாமல் கடைக்குபோறேன் ஏதேனும் வேண்டுமா கேட்டு முழித்தாய் ஷாம்பு வாங்கிவா சொன்னதும் அதோடு சேர்த்து டெய்ரி மில்க்கும் வாங்கிவந்தாய்
எனை கேலிசெய்த ஒருவனை கேள்விகேட்க படைதிரட்டி சென்று பயமுறுத்தி வந்தாய்
இப்படி எண்ணற்ற இனியநினைவுகளால் என் இன்றைய வாழ்க்கை ஓடுகிறது
நீ இல்லைஎன்றாலும் உன்நினைவுகள் காற்றாகி நீராகி எனை உயிர்ப்பித்து கொண்டிருக்கின்றன
பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ் நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா? பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்! நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.