Showing posts with label தோழிகள் தொகுப்பு. Show all posts
Showing posts with label தோழிகள் தொகுப்பு. Show all posts

Saturday, 18 October 2025

மகாலட்சுமி

எங்களின்
ஆணிவேர்
ஆதார ஸ்ருதி
இணைக்கும் சக்தி
கோப்பெரும் சோழி

பாடகி
தொழில்நுட்ப வல்லுந‌ர்
மனைவி
மகள்
தாய்
தோழி
என அத்தனைப்
பாத்திரங்ளிலும்
ஜொலிக்கும்
அன்பழகி!

இன்றுபோல்
என்றும் வாழ்க!
எண்ணற்ற இன்பமும்
எல்லையில்லா செல்வமும்
நோயற்ற வாழ்வும்
நீண்ட ஆயுளும்
பெற்று
பெருவாழ்வு
வாழ்க!

இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துகள் மகாலஷ்மி!

💐💐💐

Friday, 17 October 2025

கௌரி சிவில்

இரண்டு 
இன்னிசை
அளபெடைக்கு
சொந்தமானவள்

தொழிலில்
உச்சம் தொட்ட 
தென்றல் மொழியாள்
கௌரிக்கு இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் 

💐💐💐

யோகேஷ்

மூக்கிற்கு
திருஷ்டி 
பொட்டு
வைக்கும்
மூக்கழகி! 😀

கலை

கலைமகள்
சரஸ்வதி
இன்று
கல்விக்கூடம்
விசிட்! 😀

மகாலட்சுமி

நடமாடும்
சிலை
தன் அருகே
நிற்கக் கண்டு
ஆனந்த
மிகுதியில்
முத்தமிட
வளைகிறானோ
அந்த ஆண்மரம்?

மிருதுளா

மிருதுளமே
மென்மையே
வளர்பிறையாக
வளர்ந்து
பௌர்ணமியாக
ஒளிர்க! 
குளிர் நிலவாக
திகழ்க! 

வாழ்க வளமுடன். 💐❤

கண்களால் கைது செய்

கேமராவில்
கைது செய்யமுடியாத
காட்சிகளை
கண்களால்
சிறைப்படுத்தும்
முயற்சியா
மகனே?

நீ எடுத்த
புகைப்படத்தை
போலவே
உன் புகழும்
மங்காதிருக்கட்டும்! 

வாழ்க! வளர்க! 💐❤

Wednesday, 24 September 2025

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில்
ஒற்றுமை 
சொல்லித்தரும்
வைபவம்
இந்தக் கொலு! 

சைவமும் 
வைணவமும்
ஒன்றென
நிரூபிக்க
சிவனும்
ஹரியும்
ஒன்று சேரும்
வைபவம்!

ஆணும்
பெண்ணும்
முதியவரும்
குழந்தையும்
அனைவரும் 
ஒன்றாக
கூடிக்குழவி வாழச்
சொல்ல வந்த
வைபவம்
இந்தத் கொலு! 

மண்ணாலும்
மரத்தாலும்
கல்லாலும்
உலோகத்தாலும்
நிறத்தாலும்
உடையாலும்
செல்வத்தாலும்
வேறுபட்டாலும்
ஒன்று கூடி 
ஒரே இடத்தில்
வாழச் சொல்ல வந்த
வைபவம்
இந்தக் கொலு!

மகாலட்சுமி

எங்களின் ஆணிவேர் ஆதார ஸ்ருதி இணைக்கும் சக்தி கோப்பெரும் சோழி பாடகி தொழில்நுட்ப வல்லுந‌ர் மனைவி மகள் தாய் தோழி என அத்தனைப் பாத்தி...