Saturday, 27 May 2023

குறள் 1283

வேலை இருக்கிறது என்று
பொழுதெல்லாம் சொல்லி
எனை புறக்கணிக்கிறான்

என் நலனில் அக்கறை 
குறைவாகவே வைக்கிறான்

ஆனாலும் அவன் மீதுள்ள அன்பு
நொடிக்கொருமுறை அவன்முகம் தேடி அலைகிறது.

இந்த கண்களுக்கு கொஞ்சமும்
நாணமில்லை.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மூளை சொல்லும்
அறிவுரையை கேளாது

அவன் வரும் வழிபார்த்து
தவமாய் தவம் கிடக்கிறது.

உப்பில்லாத கண்களோ
ரோசமே வருவதில்லை!

தவிக்கவிட்டு போனாலும்
வந்தவுடன் கண்டவுடன்

அவன் சிரிக்கும் ஒற்றை
புன்னகையில் 
அவன் தந்த அத்தனை

துன்பமும் மறந்து அவனை நோக்கி ஓடுகிறது

வெட்கமற்ற கண்கள்!

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...