Wednesday, 14 May 2025

அரசவை நிகழ்வு

சேரநாட்டு
அரசவையில்
ஆலோசனை
நடந்தது!

குளிர்பதன ஆலைக்கு
பொறுப்பாளர் தேர்வு

அனுபவமிக்க
சிப்பாயை
சேனாதிபதி
பரிந்துரைத்தார்!

சிப்பாயோ
பொறுப்பைத்
தட்டிக்கழித்து
காரணங்களை
வரிசையிட்டார்.

அவனுக்கு கொடுங்கள்
இவனுக்கு கொடுங்கள்
என தள்ளிவிட பார்த்தார்!

சிப்பாயின் வேலை
அரசுக்கு
பணிசெய்தல்தானே?
அவர் ஏன்
தட்டிக் கழிக்கிறார்?

அங்கிருந்த
அனுபவமிக்க
நிர்வாகத்திறன்
நிறைந்த
மந்திரியோ

சோழ நாட்டு
ராஜாங்கத்தில்
கடைப்பிடிக்கும்
பழக்கம் ஒன்றை
பரிந்துரைத்து
ஒதுங்கி நின்றார்.

சோழ தேசத்தில்
ஆராய்ச்சி
வழிகாட்டுதல்
பன்னாட்டுப்
படையெடுப்பு
என பல பொறுப்பு உண்டு

நம்நாட்டு
சிப்பாயிக்கு
அப்படியென்ன
வேலை உண்டு?

சேரநாட்டு
மந்திரியாரே,

சிப்பாயின்
கடமை
பணிசெய்வது
என பரிந்துரை
ஏன் செய்யவில்லை?

மந்திரியின் மதி
மயங்கியதேனோ?

Saturday, 10 May 2025

மௌனிக்கு வாழ்த்து

அரசமர நிழலில்
சிமெண்ட் பெஞ்சில்
தவமிருந்து
முக்திபெறும்
புத்தருக்கு இனிய 
பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐💐💐

ஞானம் பெற்று
முடிந்திருந்தால்
புத்தகம் எழுதி
வருங்கால
சமுதாயத்திற்கு
வழிகாட்ட
வேண்டுகிறேன்.

திரவ இயக்கவியல்
திராவிட இயக்க இயல்
ஏதேனும் ஒன்றை
எழுதத் தொடங்கலாமே

மௌனிக்குள்
எரிமலை
ஏன் இருக்கக் கூடாது? 

அடுத்த அகவை 
நாளுக்குள்
புத்தக வெளியீடு
செய்யுங்கள்! 

நலம் விழையட்டும்! 

                     ~ யாரோ

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...