Wednesday, 30 July 2025

யார் நீ

பிரமிப்பு
அதிர்ச்சி
இதில்
என்ன 
பெயர் 
வைப்பது?

உறுதி
கர்வம்
இதில்
என்ன
பெயர்
வைப்பது? 

தலைமைப் பண்பு
அகங்காரம்
என்ன 
பெயர்
வைப்பது? 

நட்புக்கும்
அலுவலுக்கும்
வித்தியாசம்
கற்பிக்கிறாரா

இல்லை 
நான் தான் 
எல்லாம்
ஆணைக்கு
கட்டுப்படுவது
உன் வேலை
என்கிறாரா?

புரியாத 
குழப்பத்தில்
புன்னகையோடு
கடக்கிறேன்.

சிங்கமாக
நினைப்பதா
சிறுமையாக
நினைப்பதா

மனிதர்களுக்காக
நிறுவனமா

நிறுவனத்திற்காக
மனிதர்களா

விதிமுறை
பெரிதா

மனிதர்களின்
மகிழ்ச்சி 
பெரிதா

உன்னை
அகங்காரி
என்பதா

அமைப்புகளின்
சிறந்த நிர்வாகி
என்பதா

மாறுவதா
மாற்றுவதா

பின்பற்றவா
புறம் தள்ளவா

எதை 
செய்வது
எதை
விடுவது? 

விடை
தருவாயா?
விட்டுச்
செல்வாயா?

Wednesday, 16 July 2025

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு
முன்னூறு கவிதை
படைக்கலாம்

கவிதை
சமைப்பதைத் தாண்டி
மூக்கின் சரிவில்
சறுக்கி விழுந்தால்
என்னாவது
சுயமரியாதைக்கு
பங்கம் வருமே!

ஆங்கிலப்புலமையிலும்
ஆளுயரத்திலும்
அண்ணாவின் வடிவம்!

காற்று வெளியிடையே
புயலாக மாறி
விண்ணிலும்
மண்ணிலும்
தேசம் சுற்றும் வாலிபர்!

நீலவண்ணம் மீதான
நீங்காத நேசத்தை
கண் கண்ணாடிச் சட்டமும்
தொலைபேசி உறையும்
கடிகார வார் பட்டையும்
சட்டைப் பேனாவும்
பறைசாற்றும்!

இந்தியாவின்
இறையாண்மையை
காக்கத் துடிக்கும்
என் இறைவன் ராகுலின்
மிகச்சிறந்த
படைத் தளபதி!
இது ஈடுபாட்டை
இன்னும் கூட்டுகிறது!.

காமராஜர் விருது
ஆண்டு தோறும் வழங்கி
கல்வியின் மாண்பை
தூக்கிப்பிடிப்பவர்.

கட்சித் தாவல் செய்யாது
காலமெல்லாம் காங்கிரஸ்
ஒருவனுக்கு ஒருத்தி
என்பது போல
கலப்படம் இல்லாத கட்சிப் பற்று!

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...