திகட்டிவிடும்
தீவிர அன்பு
கசந்துவிடும்
தீவிர தேடல்
சலித்துவிடும்
தீவிர நாடல்
புறக்கணிக்கும்
தீவிர சாடல்
உறவு அறுக்கும்
தீவிர உண்ணல்
நலம் கெடுக்கும்
தீவிர கூடல்
தேகம் அழிக்கும்
அளவு மீறினால்
அமிர்தமும் நஞ்சு
அறிவாய் தோழி
அளவாய் நேசி!
- தெய்வானை
No comments:
Post a Comment