Saturday, 24 December 2022

குறள்_1129: இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே,ஏதிலர் என்னும்இவ் வூர்.

இமைகள்
மூடினால்
அவருக்கு
உறுத்தும்
என நினைத்து
இமைக்காமல்
இருந்தேன்
வெளிச்சம்
கிடைக்காமல்
பூக்களை
பார்க்காமல்
நதியை
ரசிக்காமல்
அலைகளை
காணாமல்
கஷ்டப்படுவாரே
அதற்காக
விழித்தேன்
அவர் என்ன
கடுங்காவல்
கைதியா
காற்றோட்டமில்லாத
அறையில்
பூட்டிவைக்க
அதனால்
இமைக்காமல்
இருந்தேன்!
இந்த ஊரார்
அதுபுரியாமல்
என்னை
தூங்கவிடாமல்
கொடுமை
செய்வதாக
அவரிடம் 
வம்பு பேசலாமா?

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...