Wednesday, 25 January 2023

குறள் 1160

நடந்து வருவாயா
படுத்து வருவாயா
நானொனறும் 
அறியேன்!
மகன் முகம்
பார்ப்பாயா
மண்ணுக்குள்
புதைவாயா
நானொன்றும்
அறியேன்!
வீரக்கதைகள்
நீ சொல்லக்கேட்டு
புளகாங்கிதம்
அடைவானா 
நம்மகன்
நடக்குமா இது
நானறியேன்
கண் அறுவை
செய்த அம்மா 
மருத்துவமனையில்
அப்பா கால்ஒடிந்து
வீட்டு வராண்டாவில்
அறிந்தாலும்
வரமாட்டாய்
அறிவேன் நான்
நீயில்லா சுமையும்
நீவிட்டுப்போன சுமையும்
கண்ணீரோடு
சுமப்பேன்
கவலையில்லை
ஆனால்.....
வந்துட்டேன்டி
கண்ணம்மா
என்று சொல்ல
திரும்பிவருவாய்
என்ற வரம் தந்து
பிரிந்துசெல்
மன்னவனே!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...