Monday, 30 January 2023

நினைவஞ்சலி

பனமட்டை தட்டி
பசிபோக்கி கொண்டவர்
ஏழ்மையில் வளர்ந்ததால்
கறிவேப்பிலையும்
உண்டவர்
உடன்பிறந்தோர் ஒன்பதில்
உயர்ந்த வாழ்க்கை
தொட்டவர்
படிப்பை பற்றிக்கொண்டு
பலருக்கு கற்பித்தவர்
பண மேலாண்மை
என்னவென்று
பாடம் கற்பித்தவர்
சிக்கனம் வார்த்தைக்கு
இலக்கணமானவர்
ஆட்டுக்கல்லுக்கும்
ஆடைபோர்த்தி
பாதுகாத்து வைத்தவர்
TVS 50 க்கும் வெயில்
சுடும் என்று
சாக்குபோட்டு காத்தவர்
மனைவிசொல்லே
மந்திரம் என்று
வாழ்நாள் முழுக்க
கடைபிடித்தவர்
மரங்களை கூட
மகன்களாக வள்ர்த்தவர்
முருங்கையும்
மாதுளையும்
பேரன்களாக பேணியவர்
அணிலுக்கும்
இவருக்கும்
எப்போதும் போட்டி
பழுத்த கொய்யாவை
யார் முதலில்
திண்பதென்று!
மாம்பழம் தந்துவிட்டால்
மதியசோறும்
வேண்டாம் என்பார்

கால்புண் காலன்
வந்து பரலோகம்
கூட்டி சென்றான்
உணவுசெல்லும்
பிளாஷ்டிக் குழாய்
பாசக்கயிறாய்
போனதேன்

நீங்காத நினைவில்
சுற்றமும் நட்பும்

                  -  தெய்வானை

No comments:

Post a Comment

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...