Friday, 17 February 2023

குறள் 1184

நொடிகளை
விழுங்கும்
சுறா மீன்
உன் நினைவுகள் 

அலையாய்
முன்னும்
பின்னும்
வந்து
என் மூளையை
தொட்டுச்செல்கிறது
உன் வதனமும்
வேடிக்கை பேச்சும்! 

பேசுவதெல்லாம்
உன் குணங்களை
போற்றித்தான்
அஞ்சாதவன்
அசராதவன்
அழகானவன்
நேர்மையானவன்!

இதற்கு பரிசாக
உன்னையே
தராமல்
பசலையை
ஏன் தந்தாய்?

Comments received:

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...