Saturday, 16 December 2023

தூரம்

வெந்நீர்
சூப்பு
ரசம்
கிச்சடி
மருந்து
எதுவும்
தரமுடியாது

அருகில்
அமர்ந்து
தலைகோத
முடியாது

மூலையில்
படுக்கையில்
ஒற்றையில்
எங்கோ நீ
கிடக்கையில்

உறவென
நானிருந்து
என்ன பயன்?

காற்றென
ஒலியென
ஒளியென
பாய்ந்துவர
வழியின்றி

வெற்று
வார்த்தைகளால்
வருடுவதால்
உன் வலி குறையுமோ?

இல்லை
என் வலிதான்
குறையுமோ?

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...