Friday, 17 January 2025

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும்
அதிகநேரம் அமர்ந்தால் 
இடுப்பெலும்பு வலிக்கும்
முடிஅடர்த்தி குறையும்
நரைக்கும்
தோல்கள் கடினமாகும்
தூக்கம் குறையும்

வயதாவதின் அறிகுறி!


Monday, 13 January 2025

கும்பமேளா

உன்னில்
மூழ்கி எழுந்தால்
விஷேசம் என்கிறார்கள்
அப்படி என்ன விஷேசம்?

உன்னில் வீசப்பட்ட
கரோனா பிணங்களை
சந்தனமாக ஜவ்வாது ஆக
மணம் மாற்றி 
பூசிக்கொள்ள தருவாயோ?

சாதிப்பெயரில்
சீரழித்து கொன்று
உன்மீது வீசப்பட்ட
தலித் பெண்களை

மீன்களுக்கும்
முதலைகளுக்கும்
விருந்தாக்கிய கயவர்கள்
உன்னில் மூழ்கி
புனிதமாகும் விழாவா?

அப்படி என்ன விஷேசம் இன்று
ஆளாளுக்கு வாழ்த்து
சொல்கிறார்கள்?

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...