உன்னில்
மூழ்கி எழுந்தால்
விஷேசம் என்கிறார்கள்
அப்படி என்ன விஷேசம்?
உன்னில் வீசப்பட்ட
கரோனா பிணங்களை
சந்தனமாக ஜவ்வாது ஆக
மணம் மாற்றி
பூசிக்கொள்ள தருவாயோ?
சாதிப்பெயரில்
சீரழித்து கொன்று
உன்மீது வீசப்பட்ட
தலித் பெண்களை
மீன்களுக்கும்
முதலைகளுக்கும்
விருந்தாக்கிய கயவர்கள்
உன்னில் மூழ்கி
புனிதமாகும் விழாவா?
அப்படி என்ன விஷேசம் இன்று
ஆளாளுக்கு வாழ்த்து
No comments:
Post a Comment