Monday, 3 November 2025

கௌசி - வசு : இரட்டையர்

புளியங்காயும்
மாங்காயும்
வெள்ளரிக்காயும்
இலந்தைப்பழமும்
கல்லில் கொட்டி
உப்பும் மிளகாய்ப்பொடியும்
போட்டு
பகிர்ந்துதின்ற
இளமைப்பருவம்!

பத்தாம்வகுப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசுத்தேர்வு
பயத்தை
பாடக்குறிப்புகளை
பகிர்ந்துகொண்ட
பள்ளிப்பருவம்!

கல்லூரியில்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறந்ததுவரை
எத்தனை எத்தனை
நினைவுகளின் சேமிப்பு
இருவருக்கும்!

போதாது என்று
திருமணத்திற்கு
பின்னும்
தக்காளியும்
சுரைக்காயும்
கறிவேப்பிலையும்
வெண்டைக்காயும்
அன்றாடம்
கைமாற்றும்
மகாபாக்கியசாலிகள்
கௌசியும் வசுவும்!

வேர்கள் அற்ற
வேற்றுமண்ணில்
வேராகவும்
நீராகவும்
ஒருவருக்கொருவர்
ஆதரவு!

முன்ஜென்ம பலனோ
முன்னோர்கள் வாழ்த்தோ
ஏதோ ஒன்று
பாலமாக்கி
இணைத்தது
இவ்விருவரை!

இன்னும் பல்லாண்டு
இருவரும்
இணைந்திருந்து
நட்புக்கு இலக்கணம்
எழுதிடுவீர் இருவரும்!

💐💐💐❤❤❤


No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...