Thursday, 13 November 2025

சத்யப்பிரியா

படிக்காத
புத்தகத்திற்கு
முகவுரை
எழுதும்
ஆசிரியர் போல
நான் பழகிடாத
தோழிக்கு
வாழ்த்துரை
எப்படி வழங்குவேன்?

நீ வளர்க்கும்
வாழையைப்போல
வாழ்வாங்கு
வாழ்க தோழி!

வாழையின்
பாகங்கள்
அனைத்தும்
பயன்படுவது போல
நீ எடுத்துக்கொண்ட
பாத்திரங்கள்
மகள்
மனைவி
தாய்
சகோதரி
தோழி
என்று
அனைத்திலும்
பெருமை
பெறுக!

ரத்தத்தால்
வந்த
சொந்தங்கள்
தூரம்
நின்ற போதிலும்

காலத்தால்
வந்த
பந்தம்
அருகில் நிற்க
குறையொன்று
உண்டோ கண்ணே?

முழுமதியே
பகல்நிலவே
பல்லாண்டு வாழ்க!

இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் சத்யா! 💐💐💐

மரங்களின்
காதலியோ நீ
இலைகள்
தூது வருகின்றன!

உன்னை
நெருங்க
ஆசைப்பட்டு
மயங்கி
விழுந்தன
இலைகள்!

உன் நிழல்
விழுந்ததும்
ஆசுவாசப்பட்டன

முதல் முத்தம்
பெற்ற
காதலனைப்போல!

கவனமாக
வீடு செல்
உன்னைக்
கடத்தி செல்ல
கார் ஒன்று
காத்திருக்கிறது
மரத்தின்
பின்னால்
ஒளிந்துகொண்டு!

நீ ஜன்னலை
திறந்துவைத்து
ஆடைமாற்றினாயோ

ரகசியமாக
மரம்
எட்டிப்பார்த்து
உன் ஆடையின்
கலருக்கு
ஏற்றாற்போல
தன் நிறத்தை
மாற்றிக்கொண்டது!

இந்த
மரத்திற்குத்தான்
உன்மீது
எத்தனை காதல்!

❤❤❤
 

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...