சமீபத்தில் " எளிதில் சீனமொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள் " என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் இந்திய அயலுறவு பணியில் அதிகாரி. பயணி என்ற புனைப்பெயரில் வலைஉலகில் உலா வருபவர். தான் உண்டு தன் அலுவலக வேலையுண்டு என்றில்லாமல் வேலையின்எல்லையைவிரிவாக்கிக்கொண்டவர். செல்லும் தேசங்களின் நல்ல விசயங்கள் நம் தேசத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று திரைகடல் ஓடி அறிவு திரவியம் கொணர்பவர்.
புத்தகம் பற்றி என் பார்வை:
தமிழ் வழி சீனமொழி கற்றுத்தருகிறார். சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சீனர்கள் அதிகம் வாழும் மற்ற தேசங்களுக்கும் படிக்க செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் , வியாபார காந்தங்களுக்கும், புதிதாக குடியேறுபவர்களுக்கும்,வேலைநிமித்தம் செல்பவர்களுக்கும் பயனுள்ள வழிகாட்டி நூல்.
பயணியின் நகைச்சுவை கலந்த உரை நடையும் எழுத்தும் பஸ் கண்டக்டரைப்போல " வழியில நிக்காதே, உள்ள போ , மேல போ" என்றது. முயற்சியும் முனைப்பும் புதிதாய் ஒன்றை கற்றுக்கொள்ள முக்கியம் என்று அடிக்கோடு இடுகிறார் அங்கங்கே!.
நீ ஹாவ் மா? - நீ நலமா?
வோ + ஹன் + ஹாவ் = நான் + ரொம்ப + நலம்
உச்சரிப்பு : ஷி(ழ்) முதல் எழுத்தை "தேர்வு முடிந்ததா என்ற கேள்விக்கு சொல்லும் பதில் போல சத்தமாக சொல்ல வேண்டும், இரண்டாம் எழுத்தை மார்க் என்னாச்சு கேள்விக்கு சொல்லும் பதில் போல குறைவான சத்தத்தில் சொல்ல வேண்டும் "
இப்படி பக்கத்துக்கு பக்கம் நிறைய அசத்தல்கள்.
மிக மிக எளிதாக இன்னும் நிறைய வாக்கியங்கள் கற்றுத்தருகிறார் ஆசிரியர்.
தமிழில் எழுதி விளக்குவது எளிதில் மனப்பாடமாகிறது.
இடையில் சுவாரஸ்ய கதைகளும் சேர்த்திருக்கிறார். சிரித்துக்கொண்டே படிக்கலாம்.
சிரிக்கவும் சீனமொழி கற்கவும் தயாரா??
காலச்சுவடு பதிப்பகம். வலையில் தேடுங்கள்.
நீ ஹாவ் கே ஸாத்
தெய்vanai
https://anchor.fm/s.deivanai/episodes/ep-e19ubmp
https://open.spotify.com/episode/56da9pjnJOtgwCXYg7eiY0?si=c8S4pGv7TjWoir3rbPQckA&utm_source=copy-link