தொண்டைக்குள் முள்
துப்பவும் முடியவில்லை
விழுங்கவும் முடியவில்லை
கையறுநிலை இதுதானோ?
சபிக்கவும் முடியவில்லை
வாழ்த்தவும் மனமில்லை
என்மீதே கோபம்
ஏன் இப்படி பிறந்தேன்
இன்னும் கொஞ்சம்
பணத்தோடு
அழகோடு
அதிஷ்டத்தோடு
இஷ்டத்துக்குரியவராய்
பிறந்திருக்கலாம்
எல்லாம் விதி
திட்டியோ அழுதோ தான்
தீர்த்துக்கொள்ள முடிகிறது
வாழ்க்கை நூடுல்சை விட
அதிக குழப்பத்தில்....
No comments:
Post a Comment