Saturday, 30 October 2021

ஈகோ



 என் சரியும் உன்சரியும்

முரண்பட சண்டை.... சரி!

மீண்டும் பேச

தோணவே இல்லையா?

என் அன்பு அவ்வளவு

வலிமையற்றதா?

அல்லது உன் மனம்

அவ்வளவு கல்லானதா?

கடந்து வந்த நிமிடம்

ஒன்றேனும்

நினைவில் இல்லையா?

சந்தோச தருணங்கள்

ஒன்றும் வருடவில்லையா

உன் உள்ளத்தை ?

பகிர்ந்துகொள்ள பல ரகசியம்

புலம்பி தீர்க்க பல வலிகள்

காத்திருக்கின்றன

உன் செவிகளுக்காக!

ஒவ்வொரு முறையும்

நானேன் இறங்க வேண்டும்?

இம்முறை நீ இறங்கி வா

காத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...