Thursday, 22 December 2022

குறள்_1127:கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

கண்ணன்
இருக்கை
கண்களில்
என்பதால்
கவனம் பல
கொண்டேன்
மையிட்டால்
கண்கரித்து
அவனுக்கு
கண்ணீர்
வருமோ?
யோசித்து
தவிர்த்தேன்!
சிகைக்காய்
தேய்த்து
குளித்தால்
அவன் கண்
எரியுமென்று
அரப்பை
தேர்ந்தெடுத்தேன்!
கண்ணுக்கு
நல்லதென
கேரட்டும்
பப்பாளியும்
தேடித்தேடி
சாப்பிட்டேன்!
வெயிலில்
அவனுக்கு
கண்கூசும்
என்று
கலைஞரிடம்
கண்ணாடி
கடனாக கேட்டேன்
வெளியே சென்று
திரும்பிவந்து
வெள்ளரிக்காய்
ஒத்தடம்
கண்ணனுக்கு
தந்தேன்!
இதற்கெல்லாம்
பரிசாக
உன்னையே
தருவாயா???

No comments:

Post a Comment

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...