Friday, 23 December 2022

குறள்: 1128

ஆறிப்போன டீ
ஆடைவிழுந்த காபி
விறைத்துபோன
இட்லி தோசை
கெட்டியான
மேகி நூடுல்ஸ்

இவற்றை
சாப்பிடும்போது
ருசியில்லை
என்றாலும்
இதயத்தில்
வாழும்
அவனுக்கு
சுடாமல்
இருக்கும்
என்ற நினைவு
ருசியை
அதிகரித்தது!

காலை காபி
சுட்டதா
அன்பரே?

No comments:

Post a Comment

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...