Monday, 26 December 2022

குறள்: 1130

புரோட்டானும்
எலக்ட்ரானும்
நானும்
அவரும்
சிவப்பு அணு
வெள்ளை அணு
இருவரும்!

ஒருவரின்றி
அடுத்தவரில்லை

உள்ளிருந்து
ஆட்சி செய்யும்
அழகு கண்டீரோ?
காணும் காட்சி
உண்ணும் உணவு
உடுத்தும் உடை
ஒவ்வொன்றிலும்
என் தலைவன்
உறைந்திருப்பதை
யாரறிவார்?
ஒவ்வொரு நொடியும்
நினைவில்
ஆள்வது
யாரறிவார்?

ஊனக் கண்ணில்
படவில்லை என
பிரிந்தாரென
உளறாதீர்!

No comments:

Post a Comment

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...