Tuesday, 27 December 2022

குறள் : 1132


காதல் சொல்ல
வழியின்றி
காணும் இன்பம்
துளியின்றி
ஊமை கண்ட
கனவாய்
எவ்வளவுதான்
பொறுப்பது?
மயக்கும்விழி
பாராமல்
மங்கை உனை
தீண்டாமல்
வாழ்தல்
ஒரு வாழ்வா?
மடலேறும் வழி
அறியேன்

நண்பனே!
மாமனின்
எண்ணைக்கொடு
மச்சானின்
விலாசம் கொடு
மணம் பேசி
முடித்து
மறுவேலை
பார்ப்பேன்!

No comments:

Post a Comment

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...