Sunday, 1 January 2023

குறள் : 1133 (version 2.0)

திமிறி திரிந்த
காளைகளை
திண்டு பிடித்து
நிறுத்தினேன்!

சக்கரம் ஒடிந்த
ஊர்த்தேரை
ஒருவனாய்
இழுத்துவந்தேன்!

ஊர் நடுவே
நின்ற
இளவட்டக்கல்லை
ஒரு கையால்
தூக்கினேன்!

பலராமன் நான்
பஞ்சுமூட்டை
உனை தூக்க
பலரிடம்
கெஞ்சுவதேன்?

அதிகாலை
அந்திவேளை
ஆற்றங்கரை
சென்றதில்லை!

அழகான
பெண்கூட்டம்
அலைமோதும்
என நினைத்து
உச்சிவேளை
சென்று
நீராடி வந்தேன்

மாரியம்மன்
திருவிழாவில்
முறைப்பெண்கள்
மஞ்சள் நீர்
தெளிப்பார்
என நாணி
நாள்முழுக்க
வீட்டில் கிடந்தேன்!

பலமும்
நாணமும்
மிகுந்த
ஆண் எனை
மடலேற
வைத்தாளே
மையிட்ட
மானொருத்தி!



No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...