Saturday, 11 February 2023

குறள் : 1178

கண்ணே
மணியே 
மட்டுமா 
சொன்னார்?
வீடு தருவேன்
விகாஸ் தருவேன்
வேலை தருவேன்
லட்சம் தருவேன்
வாழ்வையே
எனக்காக
அர்ப்பணிப்பேன்
என்று சொன்னார்
நானும் நம்பி
வாக்களித்தேன்
வாழ்க்கையையும்
அடகுவைத்தேன்
அந்தோ பரிதாபம்
எல்லாம் போனது
ஆனாலும் இந்த
பாழாய்போன
கண்கள் அவரை
காண ஏங்குவதேன்?

- சங்கி


Comments received : 

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...