Thursday, 16 February 2023

குறள் : 1183

வரிசையாய்
உண்டு வேலைகள்
மனம் எதிலும்
செல்லவில்லை
வகைவகையாய்
உண்டு பலகாரம்
எதையும் உண்ண
நாட்டமில்லை
உறவாட ஆயிரம்
உறவுகள் உண்டு
பேசத்தான்
விருப்பமில்லை
உட்கார்ந்தோ
படுத்தோ நேரம்
கழிகிறது
எங்கோ வெறித்தோ
பார்வையோடு
என்ன மாயம்
செய்தாய்
எனை பித்தாக்கினாய்
காதல் பட நாயகனாக
தெருவெல்லாம்
அலைவேனோ
சேது விக்ரமாகி
கீழ்ப்பாக்கம்
செல்வேனோ
என்ன செய்வதாக
உத்தேசம் என்னவனே!
காதல்நோய் தந்து
கண் மறைவது சரியா?

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...