Saturday, 18 February 2023

குறள் 1185

ப்ரிட்ஜில்
வைக்க மறந்த
இனிப்பு பண்டம்
ஒரே நாளில்
கெடுவதை போல
அவரை பிரிந்த
அடுத்த நாளே
உடலும் உள்ளமும்
கெடுவதேன்?

ஆக்சிஜன்
இன்றி
மூச்சிறைக்கும்
ஆஸ்த்மா நோயாளி
ஆகிறேன் நான்!

தரைக்கு வந்த மீனாக
வலையில் சிக்கிய புழுவாக
தவித்து போகிறேன் நான்!

பரிட்சை எழுதிவிட்டு
ரிசல்டு வர
காத்திருக்கும்
மாணவி போல
அவரை வழியனுப்பிவிட்டு
வருகைக்காக
காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...