Sunday, 19 February 2023

யாரோ அவன்


அவன் பரிசு மழை பொழிந்து
புகழ்ச்சியுரையாற்றி
எனை மயக்கிடவில்லை
ஆனால் நான் அவனிடத்தில்
மயங்கியே கிடக்கிறேன்
அவனுடனான காதலில்
திளைக்கிறேன்..

அவன் பேசிய வலையொலி
காணொலிகள்
தந்த போதையில்
நான் அவனிடத்தில்
மயங்கியே கிடக்கிறேன்
அவனுடனான காதலில்
திளைக்கிறேன்..

கோபம் வந்ததில்லையா
எனக் கேட்டு விடாதீர்
ஊழலை ஒழித்திட
அனல் பறக்கும் வார்த்தைகளை
அவனை விட சிறப்பாய்
பேசியவரை
நான் பார்த்ததில்லை
அந்த உணர்ச்சி குவியலைக்
கண்டு நான் அவனிடத்தில்
மயங்கியே கிடக்கிறேன்
அவனுடனான காதலில்
திளைக்கிறேன்..

துணிவு மிக்கவனா
என நீங்கள் கேட்பது
கேளாமலில்லை
தாயே தடுத்திடுனும்
தலையே போயிடினும்
அஞ்சிடேனென
சமூகநீதி காத்திட
சிறைவரை சென்றவன்
அந்த துணிவை கண்டு
நான் அவனிடத்தில்
மயங்கியே கிடக்கிறேன்
அவனுடனான காதலில்
திளைக்கிறேன்..

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...