Friday, 24 February 2023

குறள் 1191


பண்டிகைக்கு
வாங்கி தந்த
பட்டு அல்ல
அவர் அன்பு
அதை கட்டும்போது
சொல்லும் வார்த்தை
ஜொலிக்கிறடி
என்பதில் மின்னும்
அவர் அன்பு

வாங்கி தந்த
நகையணிந்து
கோவிலுக்கு
போகையில்
அம்மனோடு
போட்டியாடி என
நகைக்கும்போது
மிளிரும் அவர் அன்பு


சளிபிடித்து
படுக்கையில்
ஆவிபிடி என்று
சொல்லி
காலருகில்
வைக்கும்
கொதிநீரில்
தெரியும்
அவர் அன்பு

நேசம் சமமாக
கொடுத்தும்
வாங்கும்
அன்பர் உண்டெனில்
விதையற்ற கனியாக
இனிக்கும்
அந்த உறவு....

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...