Saturday, 11 March 2023

குறள் :1206

கண்கள்
உறுதி செய்த
காதலை
வாய்மொழியில்
கொண்டுவர
தெரியாமல்
சம்பந்தமில்லாத
வார்த்தைகள்
கொண்டு
தொடங்கிய பேச்சு
'காபி வித் இந்துவா'
இன்றும் காலையில்
சொல்லி பார்க்கிறேன்

நீயும் பேச தெரியாமல்
கடைக்குபோறேன்
ஏதேனும் வேண்டுமா
கேட்டு முழித்தாய்
ஷாம்பு வாங்கிவா
சொன்னதும்
அதோடு சேர்த்து
டெய்ரி மில்க்கும்
வாங்கிவந்தாய்


எனை கேலிசெய்த
ஒருவனை கேள்விகேட்க
படைதிரட்டி சென்று
பயமுறுத்தி வந்தாய்

இப்படி எண்ணற்ற
இனியநினைவுகளால்
என் இன்றைய
வாழ்க்கை ஓடுகிறது

நீ இல்லைஎன்றாலும்
உன்நினைவுகள்
காற்றாகி நீராகி
எனை உயிர்ப்பித்து
கொண்டிருக்கின்றன

உன் வருகைக்காக
எனை காக்கவைக்கின்றன!

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...