Friday, 17 November 2023

இரவு சூரியன்

என் இன்பமும் நீ
என் அவஸ்தையும்  நீ
என் இரவும் நீ
என் சூரியனும் நீ 

என் பகல் நீ
என் கனவு நீ
என் மெய் நீ
என் பொய்யும்  நீ
என் சிந்தை நீ
என் சிரிப்பும் நீ

நான் தொலைந்து போகும் காடும் நீ
வீடு வந்து சேர வழிசொல்லும் பலகையும் நீ

நான் மூழ்கும் வெள்ளம் நீ
எனை கரைசேர்க்கும் அலையும் நீ

நான் தொடமுடியா வானம் நீ
எனை தொடச்சொல்லி
தூண்டும் ஆவலும் நீ

வதைப்பவனும் நீ
வலி போக்குபவனும் நீ

உயிர் தருவதும் நீ
உயிர் எடுப்பதும் நீ

அனைத்துமாய் நீ இருக்க

அனுமதி யார் தந்தார்?

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...