Saturday, 2 December 2023

தோள்

தோள் !
எத்தனை கதைகள் கேட்கும்,
எத்தனை சுமைகள் தாங்கும்,
எத்தனை தோல்வியில் மீட்கும்,
எத்தனை கண்ணீரை துடைக்கும்,
உன் தோளும் காதும்,
எனக்காக துடித்தபோதெல்லாம்,
என் தன்னம்பிக்கை மிளிர்ந்தது,
வெற்றி திருமகள் சிரிப்பது தெரிந்தது
❤️❤️

நானிருக்கிறேன் என்றபோதெல்லாம்,
இந்த வையகமே சிறு துரும்பானது !
உன் தோள் சாய்ந்து,
வெற்றி பா படிப்பேனா ? ❤️❤️

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...