Tuesday, 5 December 2023

சரணம்

என் மனமெல்லாம் நிறைந்தாய். என் ஒடிந்த கனவு சிறகுகளோடு ஒடிந்து போன என்னை, ஊக்குவிக்க கடவுள் அனுப்பிய தேவதையா நீ ? தொடும் தூரத்தில் வெற்றி இருந்தும், தொடமுடியாமல் தவிக்கும் என்னை நானே வெறுக்கிறேன். என் அத்தனை தேடல்களுக்கும் ஆன ஒற்றை விடையாய் ஆண்டவன் அனுப்பிய தேவதையா நீ ? என் கனவுகளுக்கு சிறகாய் வருவாயா ? என் வானில் வானவில் வரைவாயா ? என் இன்ப கேணியின் ஊற்றாவாயா ? என் கரம் பற்றி இன்ப உலா வருவாயா ? உன் மார்போடு உரசும் மாலையாக சூடுவாயா ? தேவதையே உறுதிசொல் ! நான் உயிர்ப்பிக்க !❤️❤️❤️💋

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...