Sunday, 10 December 2023

துடுப்பு

ஜென்மத்தேடலில்,
வாழ்க்கைநதியில்,
நாதியற்ற ஓடத்திற்கு,
ஓர் துடுப்பாய் வந்தாய் !

வனாந்திர பயணத்தில்,
திசையறியாக்காட்டில்,
ஒளியறியா இருட்டில்,
திசைகாட்டும் குருவியாய் வந்தாய் !

ஏன் இத்தனை காலம்,
ஏன் இந்த தேடல் போராட்டம்,
ஓ ! பொக்கிஷங்கள்,
தேடிக்கிடைப்பவையோ ?

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...