Monday, 11 December 2023

தனிமை

வெற்று தனிமையும்,
பேசாதருணங்களும்,
பொருள் பொதிந்த 
மௌனங்களும்,
சில மருந்துகள் !

நடந்ததை அசைபோட்டும்,
நடப்பதை எடைபோட்டும்,
நடக்கப்போவதை எதிர்பார்த்தும்,
காத்திருக்கும் தனிமை தருணங்கள் !

சிலேடை மொழியும்,
நமக்கே புரியும் எழுத்துமாக,
காலம் கடக்கட்டும்,
சூழ்நிலை கனியட்டும்,
காதல் மொழி 
கைகோர்த்து பேசுவோம் !

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...