Friday, 22 December 2023

இணைந்த கைகள்

(1)
தலைகோதி,
தோள்கொடுத்து,
துயர்க்கேட்கும் காதுகள்,
இறுக்கப்பற்றும் கரங்கள்,
ஆசுவாசப்படுத்தும் பேச்சுக்கள்,
மீளாத்துயரில் இருந்தும் மீட்கும்,
இமாலய வெற்றிகள் ஈட்டும்.
❤️❤️

(2)
பட்டமரம் துளிர்க்கும்,
பாலைவனம் நீர் சுரக்கும்,
வெண்மேகம் பொழியும்,
நம்பிக்கை மட்டுமிருந்தால் !
❤️❤️

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...