Monday, 11 December 2023

மனிதம்

பேரிடர் காலம்,
ஓடும் மனிதன்,
நின்று மனிதம்,
போற்றும் காலம் !
மசூதியோ,
தேவாலயமோ,
கோவிலோ,
அடைக்கலம் தேடையில்,
மதம் மறப்பான் !
மொழி,
இனம்,
சாதி,
வர்ணம்,
வர்கம் மறப்பான் !
சமத்துவம்,
சகோதரத்துவம்,
நிலைநிறுத்தும்,
பேரிடர் காலம்,
அவ்வப்போது வந்து,
மனிதத்தைக் காக்கட்டுமே ! !

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...