Monday, 11 December 2023

காதலின் வலிமை

காதல் என்ன செய்யும்,
கண்டங்கள் தாண்ட செய்யும்,
கவர்ந்தவரை கரம் பற்ற செய்யும்,
கலாச்சாரம் மாறச்சொல்லும்,
கடமைகள் ஏற்கச்செய்யும்,
காதலித்தவர் சென்றபின்னும்,
செய்யாத சத்தியத்திற்கு,
வாழச்சொல்லும் !❤️❤️

எங்களால் ராஜீவை திருப்பி தரயியலாது,
நிரந்திரமாய் எம் மண்ணில் கலக்க,
இடம் மட்டும் தருகிறோம் !
இந்தியாவின் திருமகளாய்,
இந்தியா இருக்கும் மட்டும் கொண்டாடி களிப்போம் ! 

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...