Wednesday, 26 June 2024

புளியோதரை

அறிமுகமில்லாத நகரத்தில்
அருகிலுள்ள கோவிலில்
அம்மனை தரிசித்து
புளியோதரையோடு 
படியில் அமர்கையில்
அம்மாவின் நினைவுகள்
அலைகளாய் வரும்

புளியோதரை வாங்காமல்
உங்கம்மா வரமாட்டாள் பாரேன்
என கிண்டலடிக்கும்
அப்பாவோடு சேர்ந்து சிரித்த
ஞாபகங்கள்
பிரசாதம் கிடைக்கலைனா 
ஆசீர்வாதம் கிடைக்காதமாதிரி என
பிடிவாதமாக வாங்கிவந்து
வேண்டாம்னு சொல்லாதே
ஒரு வாயாச்சும் சாப்பிடு
என திணித்த நாட்களின் 
நினைவுகள் வர

பனித்த கண்களோடு
திண்ணும்போது
புளியோதரை லேசாய் 
உப்புக் கரித்தது.

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...