Tuesday, 24 September 2024

புன்னகை

சர்க்கரை அளவு 
குறைந்தால்
சாக்லேட் தேடும்
சர்க்கரை நோயாளி போல

ரத்த அழுத்தம் 
குறைந்தால்
காபி குடிக்கும்
குறை ரத்த அழுத்த
நோயாளி போல

மனச்சோர்வு
தீண்டும்போது
மருந்தாகிறாய்
தலைவா!

ஏன் உழைக்கவேண்டும்
அங்கீகாரம் இல்லை
பாராட்டு இல்லை
என எண்ணும்போது

உன் புன்னகை
மருந்தாகிறது! ❤

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...