Saturday, 20 June 2026

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின்
கவலை! 

என்னதான்
திட்டுதிட்டாய்
பான்ஸ் பவுடர்
அப்பிக்கொண்டாலும்

வசுவின்
கலருக்கு
சமமாக முடியவில்லையே...

தாழ்வு
மனப்பான்மையில்
தலையை
தாழ்த்திக்கொண்டது
ப்ளு பெரி...

கௌசியாவது
பரவாயில்லை
என் மனம்
வாடக்கூடாது
என நினைத்து

கருப்புச்சட்டை
போட்டுவந்து
கருப்பாய்
இருப்பது
குறையில்லை
என்று சொல்லி

என் தலை தடவி
ஆசுவாசப்படுத்துகிறாள்!

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...