3 சீப்பு 3 சோப்பு 3 சோறு
ஜன்னலிலோ தாழ்வாரத்திலோ
செருகியிறுக்கும் பழைய சீப்பு
ஐந்து பேரும் சீவினோம்
உறவினர் வந்தால் அவரும் சேர்ந்து
மாதத்தில் ஒரு லைப்பாய் சோப்பு
அனைவரும் ஒன்றாய் புழங்கினோம்
ஒரே சோறு ஒரே குழம்பு
சந்தோசமாக சாப்பிட்டோம்
அப்பா காண்பார் ஒரு கனவு
அனைவருக்கும் கடத்துவார் அதையே
மாற்று கனவு கண்டதும் இல்லை
மாற்று கருத்து தோனியதும் இல்லை
அனைத்தும் ஒன்றாய் புழங்கியாதாலோ என்னவோ
அனைவரின் எண்ணமும்
ஒத்து போயிற்று
இன்று
நான்கு பேர் குடும்பத்தில்
சிக்கன் சோறு கணவருக்கு
சப்பாத்தியுடன் மகனுக்கு
மட்டர் பனீர் மகளுக்கு
உப்பும் காரமும் உரக்க ஒருவருக்கு
மண்ணு மாதிரி மற்றவருக்கு
வித விதமாக சோறு!
மூன்று சீப்பு வெவ்வேறுஇடத்தில்
ஒருவர் சீப்பை மற்றவர் சீவக்கூடாதாம்
ஒருவர் சோப்பை மற்றவர்
போடக் கூடாதாம்
துணிப்பை கூட வேறு வேறு
ஒட்டி கொள்ளுமாம் நோய் !
ஆமாம் ஒட்டவே இல்லை
நோயும் மனமும் எண்ணங்களும்!
வெவ்வேறாக இருக்கிறது
அப்பாவின் கனவு டாக்டர்
மகளின் கனவு டிசைனர்
அம்மாவின் கனவு டீச்சர்
பின் குறிப்பு: நான்காவது சீப்பும் சோப்பும் வந்து சேர இன்னும் 5 வருடம் இருக்கிறது
6/8/2020: மாலை 7.17 மணி
No comments:
Post a Comment