11/05/2020....
நலமா? நன்றா?
குருடனைப் பார்த்து
ஓவியம் எப்படி கேட்பதும்
செவிடனைப் பார்த்து
இசை எப்படி கேட்பதும்
நொண்டியைப் பார்த்து
ஓட்டம் எப்படி கேட்பதும்
கால் கடுக்க நடப்பவனிடம்
கார் இல்லையா கேட்பதும்
ஜலதோசக்காரனிடம்
வாசனை எப்படி கேட்பதும்
சர்க்கரை வியாதிக்காரனிடம்
அல்வா எப்படி கேட்பதும்
பல்வலிக்காரனிடம்
முறுக்கு எப்படி கேட்பதும்
இல்லாரைப் பார்த்து
இரவல் கேட்பதும்
கல்லாரைப் பார்த்து
கல்வி கேட்பதும்
சுகமில்லாரைப் பார்த்து
சுகமோ கேட்பதும்
என்ன மனோபாவம்?
நலமா? நலமா?
நாள்தோறும் வாட்ஷப்
நன்று நன்று கேட்டு
செவி நிறையுமோ?
திண்றேன் திண்றேன் கேட்டு
வயிறு நிறையுமோ?
தீர்வு தராதோர்
பிரச்சினை அலசுவானேன்?
No comments:
Post a Comment