தொ(ல்)லைபேசி
அதை செய் இதை செய்
அப்படி செய் இப்படி செய்
ஆர்டர் மட்டும் வழிகிறது
அப்போதும் நானே
எல்லாம்செய்ய வேண்டும்
ஆணியை ஒன்றும்
புடுங்கபோவதில்லை
உடனிருக்க வரவில்லை
பேச விருப்பமில்லை
பேசாமல் இருந்தால்
வருந்தலாம் திருந்தலாம்
எதிர்பார்த்தேன்
ஒன்றும் நடக்கவில்லை
வழக்கம்போல
சந்தோச வாழ்க்கை
காலைநேர வேலை பெருமை
சாயங்கால சொத்து பெருமை
அம்மாவின் சமையல்
மனைவியும்
குழந்தைகளும்
இரண்டாம் பட்சம்
ஒவ்வொரு நிமிடமும்
தைக்கிறது உள்ளே
தனிமை கொல்கிறது
இறைவா ஏன்
இந்த விளையாட்டு?
No comments:
Post a Comment