Friday, 29 October 2021

'இந்து'வின் கவலை

'இந்து'வின் கவலை 

ஆட்சிப்பணி
காவல் பணி
நீதிப்பணி
கல்விப்பணி
சங்கிகள் திணிப்பு,
முதல்வர் பேட்டி!
கவலை படர்ந்தது..... 

பள்ளி இடைவேளையில்
வேர்க்கடலை பகிர்ந்த
8ஆம் வகுப்பு தோழிகள்
யாஷ்மினும் ஜமீலாவும்
நினைவில்வந்தார்கள்!
2ரூபாய் கடலையை
பாதியாய் பகிர்ந்து
சாப்பிடுடீ என்றனர்
விடுதி சாப்பாடு
திண்ணியோ இல்லையோ
கவலைப்பட்டனர் 

பத்து வயது இஸ்லாம் சிறுமி
பலாத்காரம் என்று
பேப்பரில் படித்தபோது
ஈஸ்வரா, ஈஸ்வரா
அது யாஷ்மின் மகளாய்
ஜமீலாவின் மகளாய்
இருக்கக்கூடாதே!
'இந்து'வாய் கவலைப்பட்டேன் 

வாரச்சந்தையில் வாங்கிய
வள்ளிக்கிழங்கு சிப்ஸை
பகிர்ந்து கொண்ட நண்பன்
நிசார் நினைவில்
வந்துபோனான்
ஜெய் ஸ்ரீராம் சொல்
என்று குரல்வளை
நெரித்து கொலை
வலையொலி காணொளி
பதட்டத்துடன் தேடினேன்
அய்யோ அவனோ?
முகம் சிதைந்து 
செத்திருந்தான்!
'இந்து'வாய் நடுங்கினேன்


அலுவலகத்தில் இருந்து
திரும்பிய பொழுதில்
கீழ்வீட்டு தோழி
சாஹிதாவின் மடியில்
என் மகள் உறங்கினாள்
என்னாச்சு பதறினேன்
ஒன்றுமில்லை தேற்றினாள்
காலையில் நீ போனபின்
விளையாடும்போது
விழுந்துவிட்டாள்
மஞ்சள் கலந்து 
பால் தந்தேன்
பருகிவிட்டு உறங்குகிறாள்
நன்றிசொல்லி
கூட்டிவந்தேன் 

மாட்டுக்கறி இருந்ததென்று
கணவனையும் மகனையும்
கொடூரமாய் கொன்றனர்
செய்திபடித்து துடித்தேன்
கண்ணீரோடு பிரார்த்தனை
சாஹிதாவின் உறவாய்
இருக்கக்கூடாதென்று! 

இந்துவும் கவலையில்
இஸ்லாமியரும் கவலையில் 

இது இந்துராஷ்டரம்!
இல்லை இல்லை
திருத்ராஷ்டிரம்


இனப்படுகொலை
இலங்கையில் நேற்று
இந்தியாவில் இன்று



யாருக்காக தேசம்?
யாருக்கான தேசம்?


    -  தெய்வானை / இந்து

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...