Friday, 29 October 2021

காதல் பாஸிட்டிவ்

சிரிக்காதே
குறுநகை புரியாதே
உதடை தடவாதே
தலைமுடி கோதாதே
ஓரமாய் பாராதே 
உயிரை உருக்காதே
தூண்டிவிட்டு
துடிக்கவிட்டு
தூரமாய் நில்லாதே
இரண்டடி இடைவெளி
இம்சையாய் இருக்கிறதே
முழுநீள சட்டையை
முட்டி வரை மடிக்காதே 

மூச்சு விட சிரமம்
கரோனாவும் இல்லை
"காம்,காம்" சொல்லிக்கொண்டேன்
"அம்" மட்டும் அடங்கவில்லை
ஒன்று என்னை தின்றுவிடு
இல்லையேல் கொன்றுவிடு 





No comments:

Post a Comment

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...